சால்வா ஜுடும்
சால்வா ஜுடும் (Salwa Judum) என்பதற்கு கோண்டி மொழியில் அமைதிப் பேரணி என்றும்; புனித வேட்டை என்று பொருள் ஆகும். இந்தியாவின் சிவப்பு தாழ்வாரம் பகுதியில் அமைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் சால்வா ஜுடும் இயக்கத்தின் தலைவராக, உள்ளூர் கோண்டு பழங்குடி மக்களைச் சேர்ந்த மகேந்திர கர்மா என்பவர் 2005-ஆண்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போராளிகளிடமிருந்து உள்ளூர் கோண்டு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும்; போராளிகளை விரட்டியடிக்கவும், சத்தீஸ்கர் மாநில காவல் துறை தேவையான தற்காப்பு மற்றும் ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் போராளிகளுக்கு எதிராக போரிட துப்பாக்கி போன்ற ஆயுங்களையும் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு வழங்கியது.[1][2]
6 சூலை 2011-இல் இந்திய உச்ச நீதிமன்றம் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளுக்கு எதிரான சால்வா ஜுடும் இயக்கம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. எனவே சத்தீஸ்கர் அரசு சால்வா ஜுடும் இயக்கத்தை கலைத்ததுடன், சத்தீஸ்கர் மாநில காவல் துறை பழங்குடி மக்களுக்கு வழங்கிய துப்பாக்கி போன்ற ஆயுதங்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.[3]
25 மே 2013 அன்று சால்வா ஜுடும் இயக்கத்தின் தலைவர் மகேந்திர கர்மா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ராய்ப்பூர் மற்றும் ஜெகதல்பூர் நகரத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்பா சமவெளியில் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Salwa Judum - menace or messiah?". The Times of India. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Left in the lurch". பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ J. Venkatesan. "Salwa Judum is illegal, says Supreme Court". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ Bagchi, Suvojit (25 May 2013). "Mahendra Karma killed, V.C. Shukla injured in Maoist.because of Salwa Judoom more than 2 lac people forced to become homeless , more than 650 villages devastated, and Salwa judoom killed more than three thousand tribals attack". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/other-states/mahendra-karma-killed-vc-shukla-injured-in-maoist-attack/article4750467.ece. பார்த்த நாள்: 26 May 2013.
வெளி இணைப்புகள்
தொகு- The Adivasis of Chhattisgarh: Victims of Naxalite Movement and Salwa Judum Campaign பரணிடப்பட்டது 2008-07-21 at Archive-It
- Unreported World: India's Hidden War
- Naxal Issues பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்
- Economic and Political Weekly Article on NHRC report
- Report of the IAPL Fact Finding Mission[தொடர்பிழந்த இணைப்பு]
- Video Documentary (20 mn.) on Salwa Judum Camps பரணிடப்பட்டது 2018-09-10 at the வந்தவழி இயந்திரம்