சாளுக்கியர்-சோழர் போர்கள்
சாளுக்கியர் - சோழர் போர்கள் என்பது (Chola–Chalukya wars) கிபி 992 முதல் கிபி 1120 வரை சோழ, சாளுக்கிய அரசுகளுக்கிடையே நிகழ்ந்த போர்களைக் குறிக்கும். இந்த அரசுகள் இரண்டும் அக்கால இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டவையாகும்.
சாளுக்கிய இராச்சியத்தின் மீதான சோழர்களின் வெற்றிகள்
தொகுசோழர்–சாளுக்கியர்களுக்கு இடையே நிகழ்ந்த துவக்ககாலப் போர்கள் சாளுக்கிய இராச்சியத்தின் தென்பகுதியிலும், பிற்காலப் போர்கள் சாளுக்கிய இராச்சியத்தின் நடுப்பகுதியிலும் நடந்தவை. வெகுசில போர்கள் வேங்கியில் நடந்தவையாகும். வேங்கியில் நடந்த போர்களில் பெரும்பாலும் சோழர்களின் கையே ஓங்கியிருந்தது.
போர் நடைபெற்ற ஆண்டு (C.E.) | போர் | தற்போதைய அமைவிடமும் மாவட்டமும் | சாளுக்கியத் தளபதி | சோழத் தளபதி | முடிவுகள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
992 | இரட்டைப்பாடி 7 1/2 | சித்திரதுர்க்கம் மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இராஜராஜ சோழன் | சோழர்கள் வென்று அவ்விடத்தைக் கைப்பற்றினர் | |||||
1008 | இரட்டைப்பாடி 7 1/2 | சித்திரதுர்க்கம், பெல்லாரி மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இளவரசன் இராஜேந்திர சோழன் "வித்தியாதரர்" (Hottur stone inscription) | ||||||
1008 | பனவாசி 12,000 | ஹம்பி-பெல்லாரி மாவட்டத்துக்கருகில் | சத்தியாச்சாரியன் | இராஜேந்திர சோழன் | ||||||
1008 | ரெய்ச்சூர் 2000 | ரெய்ச்சூர் மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இராஜேந்திர சோழன் | ||||||
1008 | குல்பர்கா 7,000 | குல்பர்கா மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இராஜேந்திர சோழன் | ||||||
1008 | மான்யகேத்து (மால்கேட்) | மகாகன் அருகில்-பிதார் மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இராஜேந்திர சோழன் | "இராஜேந்திர சோழன் தனது ஒன்பது இலட்சம் வீரர்களுடன் கூடிய படைகொண்டு மான்யகேத்தை அழித்தான்"(Hoattur inscriptions). இந்தப் போர்களில் சோழர்கள் வென்று தொடர்ந்து அடுத்த ஏழாண்டுகளுக்கு இப்பகுதிகளை ஆண்டனர். | |||||
1008 | தோனூர்-கிருஷ்ணா ஆற்றங்கரையிலமைந்த தோனூர் | பீஜப்பூர் அருகில்-பீஜப்பூர் மாவட்டம் | சத்தியாச்சாரியன் | இராஜேந்திர சோழன் | சாளுக்கிய அரசன் கொல்லப்பட்டான். சாளுக்கியர்கள் தங்கள் தலைநகரை சோழ நாட்டு எல்லையை விட்டுத் தள்ளி, அழிக்கப்பட்டுவிட்ட மான்யகேத்துக்கு வடகிழக்கில் 48 கிமீ தொலைவிலமைந்த கல்யாணிக்கு (பிதார் மாவட்டம்) மாற்றினர். | |||||
1015 | மரணமடைந்த சோழ அரசன் இராஜராஜ சோழனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு சோழர்படை திரும்பியதால் சாளுக்கியர் ரெய்ச்சூரை மீண்டும் தமதாக்கிக் கொண்டனர். துங்கபத்ரா ஆறு இரு நாடுகளுக்குமிடைப்பட்ட நிரந்தர எல்லையானது. | |||||||||
1019 | பாலகான் (Balagaon) | பீஜப்பூர் மாவட்டம் | ஐந்தாம் விக்கிரமாத்தித்தயன், இளவரசன் ஜெயசிம்மன் | மலப்பிரபா பகுதியின் சோழ ஆளுனர் | சாளுக்கியர் வெற்றி | |||||
1019 | பெல்காம் | பெல்காம் மாவட்டம் | ஐந்தாம் விக்கிரமாத்தித்தயன், இளவரசன் ஜெயசிம்மன் | மலப்பிரபா பகுதியின் சோழ ஆளுனர் | சாளுக்கியர் வெற்றி; சோழ ஆளுனர் கொல்லப்பட்டார் | |||||
1020 | முசாங்கி | ரெய்ச்சூர் மாவட்டம் | ஐந்தாம் விக்கிரமாத்தித்தியன் | இராஜேந்திர சோழன் | சாளுக்கிய இராச்சியத்தின் தென்பகுதி முழுவதையும் சோழர்கள் சூறையாடி, ரெய்ச்சூரைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டனர். | |||||
1042 | குல்பர்கா | குல்பர்கா மாவட்டம் | முதலாம் சோமேசுவரர், இளவரசர்கள் விக்கிரமாதித்தியன் மற்றும் விஜயாதித்தன் | இளவரசன் இராஜாதிராஜ சோழன் | சாளுக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; குல்பர்கா சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது. | |||||
1045 | நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைப் பார்க்க சோழ இளவரசன் சென்றபோது, முதலாம் சோமேசுவரன் குல்பர்காவையும் ரெய்ச்சூரையும் மீண்டும் தன் நாட்டுடன் இணைத்தான். | |||||||||
1046 | கம்பிளி | கம்பிளி, ஹொசபேட் அருகில்-பெல்லாரி மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | இராஜாதிராஜ சோழன் | சோழர் வெற்றிபெற்றி மீண்டும் ரெய்ச்சூரைக் கைப்பற்றினர். | |||||
1048 | பூந்தூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை | குல்பர்கா மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | இராஜாதிராஜ சோழன் | சோழர் வெற்றிபெற்றி மீண்டும் குல்பர்காவைக் கைப்பற்றினர். | |||||
1048 | மன்னாதி-கிருஷ்ணா ஆற்றங்கரை | குல்பர்கா மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | இராஜாதிராஜ சோழன் | ||||||
1048 | கல்யாணி | பீதர் மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | இராஜாதிராஜ சோழன் | சோழர் வெற்றி; கல்யாணியைக் கைப்பற்றினர். சாளுக்கியர் குந்தள நாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர். | |||||
1050 | சாளுக்கிய அரசன் முதலாம் சோமேசுவரன் கல்யாணி வரை தாங்கள் இழந்த பகுதிகளை மீட்டான். | |||||||||
1054 | கொப்பதீர்த்தம்-மலப்பிரபா ஆற்றங்கரை | கோல்காப்பூர்-பீஜப்பூர் மாவட்டத்திற்குத் தென்மேற்கே 30 கிமீ தொலைவு | முதலாம் சோமேசுவரன் | இராஜாதிராஜ சோழன் | முதலாம் சோமேசுவரன் முன்னேறிச் சென்று குல்பர்கா, பீஜப்பூரை மீட்டான். 54 வயதான இராஜாதிராஜன் யானை மீதிருந்தவாறு உயிர் பிரிந்தார்; இரண்டாம் இராஜேந்திர சோழர் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடிசூடப்பட்டு, சோழப்படைக்குத் தலைமை வகித்துப் போரில் வென்றான். சாளுக்கிய இளவரசன் ஜெயசிம்மன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான். | |||||
1054 | கோல்ஹாப்பூர் | கோல்காப்பூர் - தெற்கு மகாராட்டிரம் | முதலாம் சோமேசுவரன் | இரண்டாம் இராஜேந்திர சோழன் | - | 1059 | முடக்கூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை | குல்பர்கா மீது படையெடுத்து வந்த முதலாம் சோமேசுவரன் விரட்டியடிக்கப்பட்டான். | ||
1063 | குல்பர்கா | குல்பர்கா மாவட்டம் | இளவரசன் விக்கிரமாதித்தியன் | வீரராஜேந்திர சோழன் | ரெய்ச்சூர்-பெல்லாரி மாவட்டத்தின் கங்கபாடியில் கலவரங்களை அடக்கியபின், சோழ அரசன் குல்பர்காவிற்கு வந்தான். குல்பர்கா மீது படையெடுத்த சாளுக்கிய இளவரசன் முறியடிக்கப்பட்டான். | |||||
1064 | கொல்லூர்-கிருஷ்ணா ஆற்றங்கரை | மேற்கு கர்னூல் மாவட்டம் | வேங்கியின் மீது படையெடுத்து வந்த சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தியன், இரண்டாம் நரேந்திரன் மற்றும் வீரராஜேந்திர சோழனால் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். முதலாம் இராஜநரேந்திரனின் திடீர் மரணத்தால் வேங்கியில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வேங்கியின்மீது இந்த சாளுக்கியப் படையெடுப்பு நடந்தது. | |||||||
1064 | கூடல்சங்கமம்-கிருஷ்ணா ஆறு பஞ்சகங்கை துணையாறுகளுடன் சங்கமிக்கும் இடம் | கிட்னாப்பூர் அருகில் - பீஜப்பூர் மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | வீரராஜேந்திர சோழன் | சாளுக்கியப் படை முழுவதுமாக அழிக்கப்பட்டது. | |||||
1066 - | கிருஷ்ணா ஆற்றங்கரை, குல்பர்கா அருகில் | குல்பர்கா மாவட்டம் | முதலாம் சோமேசுவரன் | வீரராஜேந்திரசோழன் | குல்பர்காவை அடைய முற்பட்ட சாளுக்கிய முயற்சி தோற்கடிக்கப்பட்டது. | |||||
1067 | கரந்தை, கல்யாணிக்கு வடபுறம் | கரஞ்சி ஆற்றுப் பள்ளத்தாக்கு -பீதர் மாவட்டம் | சாளுக்கியத் தளபதிகளும் கடம்ப இளவரசனும் | வீரராஜேந்திர சோழன் | முதலாம் சோமேசுவரன் போருக்கு வரவில்லை. வெகுண்டெழுந்த சோழர் படை கல்யாணியையும், கரஞ்சியையும் சூறையாடி அழித்தனர். கல்யாணிக்கு வடகிழக்கே 15 கிமீ தொலைவிலமைந்த மஞ்சிரா ஆற்றில் முதலாம் சோமேசுவரம் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டதாகப் பின்னர் தெரியவந்தது. | |||||
1067 | சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தியன் வேங்கியின்மீது படையெடுத்து வென்றதுடன் சக்கரகோட்டத்தையும் (பாசுதர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்) வென்றான். | |||||||||
1068 | விஜயவாடா | கிருஷ்ணா மாவட்டம் | பிற்கால சாளுக்கிய அரசர்களில் முதலாவதும் கடைசியானவனுமான ஆறாம் விக்கிரமாதித்தியன் | வீரராஜேந்திர சோழன் (58 அகவை) | ||||||
1068 | சக்கரகோட்டம் | பாசுதர் மாவட்டம் (மத்தியப் பிரதேசம்) | ஆறாம் விக்கிரமாதித்தியன் | வீரராஜேந்திரன் | சாளுக்கியர் தோற்கடிக்கப்பட்டு கல்யாணிக்கு விரட்டப்பட்டனர். வீரராஜேந்திர சோழர், ஏழாம் விஜயாதித்தியனை வேங்கி அரசனாக முடிசூட்டினார். | |||||
1068 | முதலாம் சோமேசுவரனின் இறப்புக்குப் பின் விக்கிரமாதித்தியனனின் மூத்த சகோதரன் இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய அரசனானான். விக்கிரமாதித்தியன், கடம்பம், நுளும்பம், கங்கபாடி இளவரசர்கள் வீரராஜேந்திர சோழனுடன் சமாதானம் பேசி, இரண்டாம் சோமேசுவரனை அரசபதவியிலிருந்து நீக்க உதவி கேட்டனர். சோழனும் அவர்களது உதவ ஒப்புக்கொண்டான். . | |||||||||
1070 | குத்தி | அனந்தப்பூர் மாவட்டம் | இரண்டாம் சோமேசுவரன் | வீரராஜேந்திர சோழன், விக்கிரமாதித்தியன் | ||||||
1070 | கம்பிளி | ஹோஸ்பேட்டு அருகில்-பெல்லாரி மாவட்டம் | இரண்டாம் சோமேசுவரன் | வீரராஜேந்திர சோழன் | ||||||
1070 | ரெய்ச்சூர் | ரெய்ச்சூர் மாவட்டம் | இரண்டாம் சோமேசுவரன் | வீரராஜேந்திர சோழன் | அனைத்துப் போர்களிலும் வீரராஜேந்திர சோழன் வென்று சாளுக்கிய அரசானாக விக்கிரமாதித்தியனுக்கு முடிசூட்டினான். | |||||
1075 | நாங்கிலி | கோலார் மாவட்டம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | முதலாம் குலோத்துங்கன் | ||||||
1075 | மணலி | தும்கூர் மாவட்டம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | முதலாம் குலோத்துங்கன் | ||||||
1075 | காளத்தி (Halatthi) | சித்திரதுர்க்கம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | முதலாம் குலோத்துங்கன் | ||||||
1076 | நாவிலா (Navila) | பெல்லாரி மாவட்டம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | முதலாம் குலோத்துங்கன் | ||||||
1076 | --துங்கபத்திரா ஆற்றங்கரையில் | ரெய்ச்சூர் மாவட்டம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | முதலாம் குலோத்துங்கன் | குலோத்துங்கன் வெற்றி; ரெய்ச்சூர் வரை மீட்டனர். | |||||
1088 | ரெய்ச்சூர், பெல்லாரியை சாளுக்கியர் மீட்டனர். | |||||||||
1098 | Chola conquer Bellary (Gambili) back | சோழர்கள் பெல்லாரியை (கம்பிளி) மீட்டனர். | ||||||||
1118 | வேங்கி, கங்கபாடியை விக்கிரமாத்தித்தியன் கைப்பற்றினான் | |||||||||
1120 | விஜயவாடா | கிருஷ்ணா மாவட்டம் | ஆறாம் விக்கிரமாதித்தியன் | விக்கிரம சோழன் | விக்கிரம சோழன் வேங்கியை மீட்டான். 12, 13 ஆம் நூர்றாண்டுகளில் சாளுக்கியர்கள், சோழர்களின் வலுக் குன்றியது. ஹோய்சளர், காக்கத்தியர், பிற்காலப் பாண்டியர் வலுப்பெற்றனர். |
மேற்கோள்கள்
தொகு- "Tennaattu Porkalangal" by Ka. Appaturaiyaar
- "VeeraSozhiyam"
- "Kalingattu Parani" by Jayankondaar
- [1] our Karnataka
- சாளுக்கியர் wiki-Chalukya
- [2] Indian inscriptions, Archaeological Society of India
- "Prabandha Chintamani" of Merutunga
- Vijnanesvara's " Mitakshara"
- Kirthi Verma's "Govaidya "
- "Ajitapurana and Sahasabhimavijaya" of Ranna
- Bilhana's "Vikramankadeva Charitha"