சாவோ தொமே
சாவோ தொமே (São Tomé) சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின் தலைநகரம் ஆகும். 2012 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 179,200 ஆகும். இது இந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இதன் பெயர் போர்த்துக்கேய மொழியில் "புனித தோமா" என்பதாகும். இது முதன்மைத் துறைமுகமாகவும் விளங்குகின்றது. சாவோ தொமே தீவின் வடகிழக்கில் அனா ஷாவிஸ் வளைகுடாவில் அமைந்துள்ளது.
சாவோ தொமே | |
---|---|
நகரம் | |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியில் சாவோ தொமேயின் அமைவிடம் | |
நாடு | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி |
மாநிலம் | சாவோ தொமே மாநிலம் |
மாவட்டம் | அகுவா கிராண்டெ |
நிறுவப்பட்டது | 1485 |
பரப்பளவு | |
• மொத்தம் | 17 km2 (7 sq mi) |
ஏற்றம் | 137 m (449 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 179 200 |
• அடர்த்தி | 180/km2 (500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+0 (ஒ.அ.நே) |
இடக் குறியீடு | +239-11x-xxxx through 14x-xxxx |
வரலாறு
தொகு1485இல் போர்த்துகேயர்களால் இது கட்டமைக்கப்பட்டது. centred on a 16-ஆம் நூற்றாண்டு கால மறைமாவட்டப் பேராலயத்தை மையமாகக் கொண்டு இது நிறுவப்பட்டுள்ளது. அக்காலத்தில் கட்டப்பட்ட மற்றுமொரு கட்டிடம் சாவோ செபாஸ்தியோ கோட்டை ஆகும். இக்கோட்டை 1575இல் கட்டப்பட்டது. தற்போது அங்கு சாவோ தொமே தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1599இல் நகரமும் தீவும் டச்சுக்காரர்களால் இரண்டு நாட்களுக்கு கைப்பற்றப்பட்டது. 1641இலும் ஓராண்டுக்கு டச்சு வசம் இருந்தது. 1753 வரை இக்குடியேற்றத்தின் தலைநகரமாக சாவோ தொமே இருந்தது; 1852 முதல் தேசிய தலைநகரமாக இருந்து வருகின்றது.
திரிபுக் கொள்கை விசாரணையின்போது யூதர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கியதால் சாவோ தொமே பிரபலமாயிற்று. போர்த்துக்கல்லின் முதலாம் மானுவல் மன்னர் யூதர்களை கட்டாய மதமாற்றம் செய்ய அவர்களது பிள்ளைகளை கடத்தி வெகுதொலைவிலிருந்த இந்த தீவிற்கு அனுப்பினார்.
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், São Tomé | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32 (90) |
33 (91) |
33 (91) |
33 (91) |
31 (88) |
31 (88) |
31 (88) |
32 (90) |
32 (90) |
32 (90) |
32 (90) |
33 (91) | |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
30 (86) |
31 (88) |
30 (86) |
28 (82) |
28 (82) |
28 (82) |
29 (84) |
29 (84) |
29 (84) |
29 (84) |
29 (84) | |
தாழ் சராசரி °C (°F) | 23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
21 (70) |
21 (70) |
21 (70) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) | |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 20 (68) |
20 (68) |
20 (68) |
20 (68) |
19 (66) |
19 (66) |
19 (66) |
19 (66) |
19 (66) |
19 (66) |
19 (66) |
19 (66) | |
பொழிவு mm (inches) | 81 (3.19) |
107 (4.21) |
150 (5.91) |
127 (5) |
28 (1.1) |
0 (0) |
0 (0) |
23 (0.91) |
109 (4.29) |
117 (4.61) |
89 (3.5) |
966 (38.03) | |
ஆதாரம்: BBC Weather [1] |
உசாத்துணை
தொகு- ↑ "Average Conditions Sao Tome, Sao Tome Principe". BBC Weather. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 17, 2009.
வெளி இணைப்புகள்
தொகு- Sao Tome and Principe திறந்த ஆவணத் திட்டத்தில்
- www.saotome.st – Facts about the country, how to get there, where to stay, what to do, images etc.
- Local travel agency Navetur-Equatour – information&pictures http://www.navetur-equatour.st/
- Coordinates: 0°20′10″N 6°40′53″E / 0.33611°N 6.68139°E