சிகாகோ வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்

சிகாகோ வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் (ஃஜஅஉ) (வானொலி தகவல்தொடர்பு: "சிகாகோ மையம்") என்பது அமெரிக்கக் கூட்டாட்சி விமானப்போகுவரத்து வாரியத்தால் தொடர்தாபிக்கப்பட்ட 22 தேசிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் (வா. போ. க. மை.) ஒன்றாகும்[1] இலினொய் மாநிலத்தைச் சேர்ந்த அரோரா ஊரில், 619 மேற்கு நியூ இந்தியன் ட்ரெயில் ரோட்டில் அமைகின்றது.[2]

சிகாகோ மையத்தின் முதன்மைப் பொறுப்பு, பாதுகாப்பான, ஒழுங்கான, மற்றும் துரிதமான விமானப்போக்கை நிலைநாட்டுவதற்காக, பன்னாட்டு விமானப்போக்கு, வருகைகள், மற்றும் புறப்பாடுகளை வரிசைப்படுத்தி கட்டுப்படுத்துவதே ஆகும்.

சிகாகோ மையம், மத்தியகிழக்கு அமெரிக்காவின் இலினொய், இந்தியானா, மிச்சிகன், விஸ்கொன்சின், மற்றும் அயோவா மாநிலங்களை உட்பட்ட சுமார் 91,000 சதுர மைல் நிலப்பரப்பு கொண்டுள்ளது.

சிகாகோ மையம், மினியாப்பொலிஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம், கேன்சஸ் நகரம் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம், இண்டியானாபொலிஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம், மற்றும் கிளீவ்லாந்து வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம், என்பவற்றின் அருகிலுள்ளது. ஃஜஅஉ, சிகாகோ, மில்வாக்கி, மேடிசன், சீடர் ராபிட்ஸ், டி மொயின், குவாட் நகரங்கள், பியோரியா, இசுப்பிரிங்ஃபீல்ட், இண்டியானாபொலிஸ், மற்றும் கிராண்ட் ராபிட்ஸ் அணுகுமுறைகளை உட்பட்ட பல அணுகுமுறை கட்டுப்பாட்டகங்களுடன் ஒட்டியுள்ளது. 

சிகாகோ மையம், அமெரிக்காவில் ஐந்தாவது மிக திறளான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமாகிறது. ஜனவரி 1, 2012 முதல், டிசம்பர் 31, 2012 வரை, சிகாகோ மையம் 2,343,281 விமான இயக்கங்களை செயல்முறைக்குள்ளாக்கியது.[3]

2014 தீவிபத்து

தொகு

செப்டம்பர் 26, 2014 அன்று, சிகாகோ மையத்தில் (ஃஜஅஉ) ஒரு எரியாட்டலின் காரணமாக, சிகாகோவின் ஓஹேர் மற்றும் மிட்வே பன்னாட்டு விமானநிலையங்களை சேர்ந்த ஃஜஅஉ மேற்பார்வையிடும் வான்வெளியில் அனைத்து விமான இயக்கங்களை நிறுத்தத் தேவைப்பட்டு, பல விமானப்பயணங்கள் இரத்தாகியுள்ளன.[4] மையத்தின் ஒரு ஊழியர் புகையை மூச்சிழுத்ததால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார், மற்றும் மற்ற ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றினார்கள். [5]

இந்நிகழ்வின் பிறகு, ஹாரிஸ் நிறுவனத்தைச் சேர்ந்து, அமெரிக்கக் கூட்டாட்சி விமானப்போக்குவரத்து வாரியத்திற்கு பணியாற்றிய ப்ரையன் ஹௌவர்ட் என்பவர்,[6][7] "வானூர்தி அல்லது வானூர்தியை சம்பந்தப்பட்ட கட்டிடங்களை வேண்டுமென்று அழிப்பது" என்ற ஓர் பிரிவின் கீழான குற்றத்தை சுமத்தினார் .[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. Federal Aviation Administration (FAA). (2010, April 28). Air route traffic control centers. Retrieved from http://www.faa.gov/about/office_org/headquarters_offices/ato/artcc/
  2. StuckMic.com. (2012). Illinois Center/EnRoute Facility Locations - Contact Information. http://www.stuckmic.com/atc-facility-directory/illinois-centerenroute-facilities-90[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Federal Aviation Administration. (2013). Air Traffic Activity System (ATADS). Retrieved from http://aspm.faa.gov/opsnet/sys/Center.asp
  4. Nickeas, Peter. "FBI: Contract worker set fire at FAA center, tried to kill himself". Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  5. Goldstein, Sasha (26 September 2014). "Illinois man charged in fire at Chicago air traffic control center". New York Daily News. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  6. "Fire at air-traffic center disrupts flights". Yahoo News. 27 September 2014. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  7. "Chicago-area air traffic center fire grounds 1,750 flights". Yahoo News. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  8. "Contract Employee Charged in Fire That Grounded Chicago Flights". ABC News. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  9. "Chicago air traffic halted over fire at FAA facility". 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.

இதர இணைப்புகள்

தொகு