சிக்கா மான்

கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மான் இனம்
சிக்கா மான்
ஆண் மான் போலந்து
ஜெர்மனியின் ஹனாவ், வைல்ட்பார்க் ஆல்டே பாசனேரியில் பெண் மான் (பின்னால்).
ஆண் சிகா இனப்பெருக்க அழைப்புகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
செ. நிப்பான்
இருசொற் பெயரீடு
செர்வசு நிப்பான்
தெம்னிக், 1838

சிக்கா மான் (Sika deer)செர்வசு நிப்பான்), வடக்கு புள்ளிமான் அல்லது ஜப்பானிய மான் என்றும் அழைக்கப்படுவது கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இது உலகின் பிற பகுதிகளுக்கு மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் தெற்கில் வடக்கு வியட்நாமில் இருந்து வடக்கில் ரஷ்ய தூர கிழக்கு வரை காணப்பட்டது. இந்த இனமானது யப்பானைத் தவிர, பிற நாடுகளில் அதிகமாக இல்லை.[2]

சொற்பிறப்பியல்

தொகு

இதன் பெயரான ஷிகா (鹿), என்பது "மான்" என்பதற்கான யப்பானிய சொல்லிருந்து வந்தது. யப்பானில், இந்த இனங்கள் நிஹோன்ஜிகா (ニホンジカ (日本 日本), "யப்பான் மான்") என்று அழைக்கப்படுகின்றன. சீன மொழியில், இவை 梅花鹿 என அழைக்கப்படுகின்றன. .

துணையினங்கள்

தொகு

இந்த மான்களின் பல இடங்களில், குறிப்பாக சீனாவில் தீவிர மரபணு மாசுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே பல துணையினங்களின் நிலை தெளிவாக இல்லை.

  • செ. நி. அப்லோடோண்டசு, வடக்கு ஒன்சூ
  • செ. நி. கிராசியனசு, சான்சி, சீனா
  • செ. நி. கிராமேயி, இரியூக்கியூ தீவுகள், யப்பான்
  • செ. நி. கோப்சி, தெற்கு சீனா
  • செ. நி. மாண்டர்னியசு, வடக்கு மற்றும் வடகிழக்கு சீனா
  • செ. நி. மன்ச்சுரிகசு, வடகிழக்கு சீனா, கொரியா மற்றும் ரஷ்ய தூர கிழக்கு
  • செ. நி. நிப்பான், தெற்கு ஒன்சூ, சிகொக்கு மற்றும் கியூஷூ

விளக்கம்

தொகு

வளர்ந்த பிறகு உடலில் உள்ள புள்ளிகளை இழக்காத சில மான் இனங்களில் சிகா மானும் ஒன்றாகும். உடலில் உள்ள புள்ளி வடிவங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடுகின்ற. தைவான் மற்றும் ஜப்பானிய கிளையினங்கள்ளின் உடலில் உள்ள புள்ளிகள் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாதவை. ஆனால் முதன்மை நிலப்பகுதியின் கிளையினங்களுக்கு பெரிய, தெளிவான புள்ளிகள் உள்ளன.

மென்மயிரின் நிறம் காவி முதல் கருப்பு வரை இருக்கும். இதன் வாலின் நிறம் வெணுமையாகும். முதுகின் முடிவில் வாலிற்கு மேலே கருப்பு நிற உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இதன் கழுத்தின், பின்புறத்தில் கருப்பு நிறக் கோடுகள் உண்டு. ஆண் மான்களுக்கு மட்டும் கொம்புகள் உண்டு. ஒவ்வொரு கொம்பிலும் நான்கு கிளைகள் உள்ளன. இவற்றில் வெள்ளை நிற மான்களும் அரிதாக அறியப்படுகிறன. குளிர்காலத்தில், இவற்றின் உடல் நிறம் கருமையாக மாறும் மேலும் புள்ளிகள் மங்கியதாக மாறும். [3] இவை நடுத்தர அளவிலான தாவர உண்ணிகள். இவையும், இவற்றின் பல கிளையினங்களும் கணிசமான பால் ஈருருமை தன்மையைக் கொண்டுள்ளன. ஆண் மான்கள் பெண் மான்களை விட பெரியதாக இருக்கும். இவை தோள் வரை 50 முதல் 110 செமீ (20 முதல் 45 அங்குலம்) உயரமும், தலை வரை உடல் நீளம் 95 முதல் 180 செமீ (35 முதல் 70 அங்குலம்) வரையிலும் இருக்கும். வால் 7.5-13 செமீ (3-5 அங்குலம்) நீளம் கொண்டது.

நடத்தை

தொகு
 
மஞ்சூரியன் சிகா மான்
Male calling, recorded at Wareham, Dorset, England, October 1964

சிகா மான்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இருப்பினும் அதிக மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில், இவை இரவாடிகளாக இருக்கும். யப்பான் போன்ற மலைப்பகுதிகளில் பருவகால இடம்பெயர்வு நடப்பதாக அறியப்படுகிறது. குளிர்காலத்தில் மலைகளில் 700 மீ (2,300 அடி) உயரத்தில் காணப்படும் கோடைக் காலத்தில் இன்றும் உயரத்தில் இருக்கும். [3]

வாழ்க்கை முறைகள் மான்களிடையே வேறுபடுகின்றன, சில தனியாக வாழ்கின்றன. மற்றவை ஒற்றை பாலின குழுக்களாக காணப்படுகின்றன. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பெரிய மந்தைகளாக சேர்கின்றன. ஆண் மான்கள் ஆண்டின் பெரும்பாலான காலம் தனியாகவே உள்ளன. எப்போதாவது ஒன்றுசேர்ந்து மந்தைகளாக இருக்கின்றன. மான்குட்டிகளைக் கொண்ட பெண் மான்கள் பிரசவ காலத்தில் மட்டுமே கூட்டமாக திரியும். [4] சிகா மான்கள் மிகவும் ஒலி எழுப்பக்கூடிய இனமாகும். 10 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட ஒலிகள், சிறிய சீழ்க்கை முதல் உரத்த அலறல் வரை எழுப்புகின்றன.

இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள் நீடிக்கும். 4.5 முதல் 7 கிலோ (10 முதல் 15 பவுண்டுகள்) எடையுள்ள ஒற்றைக் குட்டியை ஈனுகிறது. குட்டியை பத்து மாதங்கள் வரை பராமரிக்கப்படுகிறது. [4] தாய் தன் குட்டியை பிரசவித்த உடனேயே குட்டியை அடர்ந்த மரத்தடியில் மறைத்து வைக்கிறது. மேலும் தாய் வந்து மீண்டும் பாலூட்டும் வரை குட்டி மிகவும் அமைதியாக காத்திருக்கும். குட்டி பிறந்து 10 முதல் 12 மாதங்களுக்குப் பிறகு தாயைவிட்டுப் பிரிகிறது. [4] குட்டிகளில் இரு பாலிடத்தவையும் 16 முதல் 18 மாதங்களில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. காப்பகங்களில் வளர்க்கப்படும் மான்களின் சராசரி ஆயுட்காலம் 15 முதல் 18 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் ஒரு தரவில் 25 ஆண்டுகள், 5 மாதங்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [4]

சிகா மான், அதன் நெருங்கிய உறவினமான சிவப்பு மான்களுடன் இனப்பெருக்கம் செய்யக்கூடும்; கலப்பின சந்ததியினர் இனத் தூய்மை கொண்ட இதன் உறவினர்களை விட தகவமைப்பு நன்மைகளைக் கொண்டிருக்கலாம். [4]

வாழ்விடம்

தொகு

சிகா மான்கள் கிழக்கு ஆசியாவின் மிதவெப்ப மற்றும் அயன அயல் வெப்பமண்டல காடுகளில் காணப்படுகின்றன. மேலும் பனிப்பொழிவு 10-20 செமீ (4-8 அங்குலம்) தாண்டாத இடங்களில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Harris, R.B. (2015). "Cervus nippon". IUCN Red List of Threatened Species 2015: e.T41788A22155877. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T41788A22155877.en. https://www.iucnredlist.org/species/41788/22155877. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Kaji, Koichi; Takashi Saitoh; Hiroyuki Uno; Hiroyuki Matsuda; Kohji Yamamura (2010). "Adaptive management of sika deer populations in Hokkaido, Japan: theory and practice". Population Ecology 52 (3): 373–387. doi:10.1007/s10144-010-0219-4. 
  3. 3.0 3.1 Landesman, N. (22 March 2004). "Sika deer, Japanese deer". Ultimate Ungulate.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Landesman, N. "Cervus nippon". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கா_மான்&oldid=3616382" இலிருந்து மீள்விக்கப்பட்டது