சிக்குசு

மலேசியா, பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம்.
(சிக்குஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிக்குஸ் அல்லது சிக்குசு என்பது (மலாய்:Chikus; ஆங்கிலம்:Chikus; சீனம்:筑氏) மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம்.

சிக்குசு
Chikus
பேராக்
Map
சிக்குசு is located in மலேசியா
சிக்குசு
      சிக்குசு
ஆள்கூறுகள்: 4°03′N 101°6′E / 4.050°N 101.100°E / 4.050; 101.100
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்ஈலிர் பேராக் மாவட்டம்
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்www.mpti.gov.my

இந்த நகரத்திற்கு அருகில் சுங்கை பத்தாங் பாடாங்; சுங்கை மானிக் ஆறுகள் ஓடுகின்றன. அருகில் உள்ள நகரம் தெலுக் இந்தான். மிக அருகில் தாப்பா தொடருந்து நிலையம் உள்ளது. இது ஒரு கிராமப்புறச் சிறுநகரம்.

பொது தொகு

டிரான்ஸ் பேராக் - சுங்கை மானிக் நெல் வேளாண்மைத் திட்டத்திற்கு ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். நெல் வேளாண்மையில் ஈடுபட்டு உள்ளார்கள். மற்ற தொழில்கள் எண்ணெய்ப் பனை உற்பத்தி; டுரியான் பழத்தோட்டங்கள்.

சிக்குசு ஒரு கிராமப்புற நகரமாக உள்ளதால் பிற நகரங்களில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக அமைந்து உள்ளது. விரல்விட்டு எண்ணும் அளவிற்குத் தான் இந்தியர்கள் உள்ளார்கள். சீனர்களும் ஓரளவிற்கு உள்ளனர். கடைகள் வைத்து இருக்கிறர்ர்கள். 10 கி.மீ. அப்பால் []தாப்பா]] நகரம் உள்ளது. தாப்பா நகரில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

அத்தாடூரி பாலம் பாதிப்பு தொகு

2021 சனவரி மாதம் தாப்பா பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் சிக்குசு நகரத்திற்கு அருகில் இருந்த அத்தாடூரி (Attaduri) பாலம் பெரிதும் சிதைவுற்றது.[1] 22 இலட்சம் ரிங்கிட் செலவில் செப்பனிடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்குசு&oldid=3762871" இலிருந்து மீள்விக்கப்பட்டது