சிங்கரௌலி
சிங்கரௌலி (Singrauli), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு எல்லையை ஒட்டியுள்ள சிங்கரௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்நகரம், பகேல்கண்ட் பிரதேசத்தில் இருந்த ரேவா இராச்சியத்தின் கீழ் இருந்தது.
சிங்கரௌலி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): இந்தியாவின் எரிசக்தி தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 24°12′07″N 82°39′58″E / 24.202°N 82.666°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சிஙகரௌலி |
கோட்டம் | ரேவா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சிங்கரௌலி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,200 km2 (800 sq mi) |
ஏற்றம் | 463 m (1,519 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 2,20,257 |
• அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
அஞ்சல் சுட்டு எண் | 486889 |
தொலைபேசி குறியீடு | 07805 |
வாகனப் பதிவு | MP-66 |
இணையதளம் | www |
சிங்கரௌலி மாவட்டத்தில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து அதிக அளவில் நிலக்கரி வெட்டி எடுப்பதால், சிங்கரௌலி நகரத்திற்கு இந்தியாவின் நிலக்கரி தலைநகரம் என அழைக்கப்படுகிறது. சிங்கரௌலி நகரத்தில் நிலக்கரியை எரிபொருளாக கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, சிஙகரௌலி நகரத்தின் மக்கள் தொகை 2,20,257 ஆகும். அதில் ஆண்கள் 116,867 மற்றும் பெண்கள் 103,390 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 885 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30,079 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.27% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.88%, இசுலாமியர் 6.38 %, பௌத்தர்கள் 0.11 %, சமணர்கள், சீக்கியர்கள் 0.54%, கிறித்தவர்கள் 0.79% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Madhya Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ Singrauli City Population 2011