சிங்கவனம் பாளையம்

பாளையக்காரர்


'சிங்கவனம் பாளையம்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "அறந்தாங்கி" பகுதி 'சிங்கவனம்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "மெய்கண் கோபாலர்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது[1].

வரலாறு

தொகு

1879 ஆம் ஆண்டு, சவ்வாஜி விஜயரகுநாத மகாராஜா மெய்க்கண் கோபாலர் கீழ் 26 கிராமங்கள் இருந்தன (8631 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 3261 ரூபாய் 9 அணா 10 பைசா ஆகும்.[1][2]

13.04.1729 ஆண்டு, ராஜஸ்ரீ சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருஷ்ண கோபாலர் என்பவர் திருவாடுதுறை ஆதீனத்திற்க்கு சிறுபனையூர் என்னும் ஒரு ஊரில் நிலம் கொடையாக அளித்து அதை செப்பேட்டில் பதித்துள்ளார். மேலும் இவரால் 26.06.1758 ஆம் ஆண்டு மன்னார்குடி, ஜெயங்கொண்டநாதர் திருக்கோயிலுக்கு இறையலியாக 72 இராசகோபால சக்கரமும், 31.01.1760 ஆம் ஆண்டு மாலை வழிபாட்டிற்காக ஆண்டொன்றுக்கு 40 பொன் வழங்கப்பட்டது.[3][4]

தற்போதைய சிங்கவனம் ஜமீன்தார் ராமசாமி மெய்க்கன் கோபாலர் ஆவார்[5].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 91.
  2. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. 319.
  3. தஞ்சாவூர் மராட்டியர் கல்வெட்டுகள். 1987. pp. 213.
  4. திருவாரூர் மாவட்ட கல்வெட்டுகள். 2000. pp. 82.
  5. "ரேக்ளா ரேஸ் தலைவர்". தினகரன். Archived from the original on 2022-10-14. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16. {{cite web}}: no-break space character in |publisher= at position 10 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கவனம்_பாளையம்&oldid=3731885" இலிருந்து மீள்விக்கப்பட்டது