சிட்டி ஆஃப் காட்

2020 பிரேசில் திரைப்படம்

சிட்டி ஆஃப் காட் ( போர்த்துக்கேய மொழி: Cidade de Deus ) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான பிரேசிலிய காவியக் குற்றவியல் திரைப்படமாகும். இப்படத்தை பெர்னாண்டோ மெய்ரெல்லெஸ் மற்றும் கேட்டியா லண்ட் ஆகியோர் இணைந்து இயக்கினர். 2002 இல் பிரேசிலில் வெளியிடப்பட்ட இப்படம் 2003 இல் உலகம் முழுவதும் வெளியானது. 1997 ஆம் ஆண்டு பாலோ லின்ஸ் எழுதிய இதே பெயரிலான புதினத்தைத் தழுவி பிராலியோ மாண்டோவானி திரைக்கதை அமைத்தார். ஆனால் இதன் கதைக்களம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இது 1960 களின் இறுதி மற்றும் 1980 களின் தொடக்கத்தில் இரியோ டி செனீரோவின் சிடேட் டி டியூஸ் புறநகர் பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வளர்ச்சியை சித்தரிக்கிறது.

சிட்டி ஆஃப் காட்
City of God
சுவரிதழ்
இயக்கம்
  • பெர்னாண்டோ மெய்ரெல்ஸ்
  • கேட்டியா லண்ட்
தயாரிப்பு
  • ஆண்ட்ரியா பரட்டா ரிபேரோ
  • மொரிசியோ ஆண்ட்ரேட் ராமோஸ்
கதைபிராலியோ மாண்டோவானி
இசை
  • அன்டோனியோ பின்டோ
  • எட் கோர்டெஸ்
நடிப்பு
  • அலெக்சாண்டர் ரோட்ரிக்ஸ்
  • லியாண்ட்ரோ ஃபிர்மினோ
  • ஆலிஸ் பிராகா
  • ஜொனாதன் ஹேகன்சன்
  • ஃபெலிப் ஹேகன்சன்
  • டக்ளஸ் சில்வா
  • டேனியல் ஜெட்டல்
  • சியூ ஜார்ஜ்
ஒளிப்பதிவுசீசர் சார்லோன்
படத்தொகுப்புடேனியல் ரெசெண்டே
கலையகம்
  • O2 பிலிம்ஸ்
  • வீடியோபிலிம்ஸ்
  • ஹாங்க் லெவின் பிலிம்ஸ்
  • குளோபோ பிலிம்ஸ்
விநியோகம்குளோபோ பிலிம்ஸ்
மிரமாக்ஸ் பிலிம்ஸ்[1] (லூமியர் பிக்சர்ஸ் மூலம்[2])
வெளியீடுமே 18, 2002 (2002-05-18)(கேன்ஸ்)
30 ஆகத்து 2002 (பிரேசில்)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுபிரேசில்
மொழிபோத்துக்கேயம்
ஆக்கச்செலவு$3.3 மில்லியன்[3]
மொத்த வருவாய்$30.6 மில்லியன்[4]

இந்தப்படத்தில் அலெக்சாந்தரே ரோட்ரிக்ஸ், லியாண்ட்ரோ ஃபிர்மினோ, ஃபெலிப் ஆகென்சன், டக்ளஸ் சில்வா, ஆலிஸ் பிராகா, சியு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், உண்மையிலேயே, விடிகல் மற்றும் சிடேட் டி டியூஸ் போன்ற ஃபாவேலாக்களில் பவேலா எனப்படும் பிரேசிலிய சேரிகளில் வசிப்பவர்கள்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. மேலும் 76வது அகாதெமி விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவு ( சீசர் சார்லோன் ), சிறந்த இயக்குநர் (மெய்ரெல்ஸ்), சிறந்த படத்தொகுப்பாளர் (டேனியல் ரெசெண்டே), சிறந்த எழுத்து (தழுவல் திரைக்கதை) (மண்டோவானி) ஆகிய நான்கு பரிந்துரைகளைப் பெற்றது. 2003 இல், இது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கான பிரேசிலில் இருந்து நுழைந்த படமாக இருந்தது. ஆனால் இது இறுதிப் போட்டிக்கு தேர்வான ஐந்து படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்படவில்லை. ஆனாலும் பல விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகவும், எல்லா காலத்துக்குமான சிறந்த படங்களில் ஒன்றாகவும் இது அடிக்கடி பட்டியலிடப்படுகிறது.

மீரெல்லெஸ் மற்றும் லண்ட் சிட்டி ஆஃப் மென் தொலைக்காட்சி தொடர் மற்றும் சிட்டி ஆஃப் மென் (2007) திரைப்படத்தை உருவாக்கினர். இதில் சில நடிகர்களை (குறிப்பாக சில்வா மற்றும் டார்லன் குன்ஹாவை கொண்டிருந்தது) மேலும் படத்தின் கட்டமைப்பு சிட்டி ஆஃப் காட் உடன் ஒத்ததாக இருந்தது.

கதைச்சுருக்கம்

தொகு

குடியேற்ற பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவின் பதிவு செய்யப்படாத வாழ்க்கையை இப்படம் சித்தரிக்கிறது. போதைப் பொருள் வணிகம், கொள்ளை என கொடிகட்டி வாழும் இளைஞர்கள், அப்பகுதியின் சிறுவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது என ஒரு தனித்த பகுதியின் நிழல் வாழ்க்கையை இப்படம் காட்டுகிறது.

வரவேற்பு

தொகு

வசூல்

தொகு

இந்தப் படம் 2002 கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டிக்கு வெளியே திரையிடப்பட்டது.[5] பிரேசிலில், சிட்டி ஆஃப் காட் 2003 இல் உள்நாட்டுப் படங்களுக்கான மிகப் பெருமளவிலான பார்வையாளர்களை ஈர்த்தது. 3.1 மில்லியன் கூடுதலான நுழைவுச் சீட்டுகள் விற்பனையாயின.[6] இப்படம் அமெரிக்காவில் $7.5 மில்லியனுக்கும், உலகம் முழுவதும் US$ 30.5 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது.[7]

குறிப்புகள்

தொகு
  1. Lyons, Charles (16 May 2002). "Miramax hails Brazilian 'God'". Variety. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  2. Cajueiro, Marcelo (12 October 2007). "Lumiere relights business". Variety. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  3. Izmirlian, Pablo (4 September 2005). "From Way South of the Border, an Ecuadorean Thriller". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402104031/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/09/02/AR2005090200577.html. 
  4. "City of God". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் August 30, 2022.
  5. "Cidade de Deus". கான் திரைப்பட விழா. Archived from the original on 10 October 2012. பார்க்கப்பட்ட நாள் 1 November 2009.
  6. "Informe 269" (PDF) (in போர்ச்சுகீஸ்). Filme B. Archived from the original (PDF) on 6 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 April 2009.
  7. City of God பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் at Box Office Mojo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_ஆஃப்_காட்&oldid=4162502" இலிருந்து மீள்விக்கப்பட்டது