சித்தன்கேணி

சித்தன்கேணி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இது, சித்தன்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகின்றது.[1] இவ்வூரின் கிழக்கே சங்கானையும், தெற்கில் வட்டுக்கோட்டையும், மேற்கில் பண்ணாகம், தொல்புரம் ஆகிய ஊர்களும் உள்ளன. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியும், வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியும் இவ்வூரில் ஒன்றையொன்று வெட்டிச் செல்கின்றன. இச்சந்தி சித்தன்கேணிச் சந்தி எனப்படுகிறது.

நிறுவனங்கள் தொகு

சித்தன்கேணியில் இரண்டு அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் பிலவத்தை அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை வகுப்புக்கள் உள்ளன. சிறீ கணேச வித்தியாலயத்தில் மாணவர்கள் 13 ஆம் ஆண்டுவரை கற்கலாம்.

இவ்வூரில், சிறீ மகாகணபதி கோயில் எனப்படும் ஒரு பிள்ளையார் கோயிலும், சிறீ சிவசிதம்பரேசுவரர் கோயில் என அழைக்கப்படும் சிவன் கோயில் ஒன்றும் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தன்கேணி&oldid=2775575" இலிருந்து மீள்விக்கப்பட்டது