தொல்புரம்

தொல்புரம், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊர் ஆகும்.[1] இவ்வூர் தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மத்தி, தொல்புரம் மேற்கு என மூன்று பிரிவுகளாக உள்ளது. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் சித்தன்கேணி, சுழிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள இவ்வூர் யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 15.5 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கில் சுழிபுரம், பண்ணாகம் ஆகிய ஊர்களும், கிழக்கில் சித்தன்கேணி, வட்டுக்கோட்டை ஆகிய ஊர்களும், தெற்கில் மூளாயும், மேற்கில் சுழிபுரமும் உள்ளன.

நிறுவனங்கள்தொகு

தொல்புரத்தில் இரண்டு அரசுப் பாடசாலைகள் உள்ளன. தொல்புரம் மத்தியில் தொல்புரம் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. இங்கே தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. தொல்புரம் கிழக்கில் தொல்புரம் விக்கினேஸ்வரா பாடசாலை உள்ளது. இப்பாடசாலையில் முதலாம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டுவரையான வகுப்புக்கள் உள்ளன.

இங்கு அமைந்துள்ள கோயில்களுள் தொல்புரம், வழக்கம்பரை அம்மன் கோயில் முக்கியமானது. அத்துடன், தொல்புரம்கொட்டடியம்பதி ஆதி முத்துமாாி அம்மன் கோயில், தொல்புரம் பத்தணைக்கேணியடி ஞான வைரவர் கோயில்தொல்புரம் பூதராசி அம்மன் கோயில், என்பனவும் இவ்வூரில் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்புரம்&oldid=2854116" இருந்து மீள்விக்கப்பட்டது