சித்தர்காடு
சித்தர்காடு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிற்றூராட்சி ஆகும்[2]. இந்த ஊராட்சியில் கிபி.13 ஆம் நூற்றாண்டு கால சிவத் தலம் உள்ளது. இந்த சிவத்தலத்தில் "சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகள்" ஜீவசமாதி உள்ளது.
சித்தர்காடு | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஊராட்சி தலைவர் | செல்வகுமாரி[1] |
மக்களவைத் தொகுதி | சித்தர்காடு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சிறப்பு
தொகு13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகளும், அவரது சீடர்களும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளனர். தமிழ் நாட்டில் பல ஜீவசமாதி அமைந்து இருந்தாலும், ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ள நிகழ்வு இங்கு மட்டுமே என்பதுதான் இதன் சிறப்பு. இக்கோயில் கருவறையின் சுவரில் இது குறித்த கல்வெட்டும், 63 சிவலிங்கமும் வடிக்கப்பட்டுள்ளது.
கண்ணப்பர் தொடர்பு
தொகு63 பேரும் சமாதி அடைந்த நேரத்தில் தனக்கு ஒரு இடம் ஒதுக்கப்படவில்லையே என வருந்திய கண்ணப்பர், தவச்சுவை அறிந்துவந்துள்ளேன், என்னையும் ஏற்று அருள வேண்டும் என்று தனது குருவை நினைத்து வேண்டி ஓர்பெண்பா பாடியதாகவும், அப்போது சமாதி பிளந்து வெளிப்பட்ட சிற்றம்பல நாடிகள், தனது சீடன் கண்ணப்பரை தன் மடியில் அமர்த்தி, கண்ணப்பரை தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்து மீண்டும் ஜீவசமாதி ஏற்றார் என்பதும் ஐதீகம். [3]
அமைவிடம்
தொகுமயிலாடுதுறை தொடருந்து சந்திப்பிலிருந்து மேற்கில் சுமார் ஒரு கி. மீ. தொலைவில் இந்த ஜீவசமாதி அமைந்து உள்ளது. இந்த ஜீவசமாதி அமைந்துள்ள இடமே பிரம்மபுரீஸ்வரர் கோயில் எனும் சிவதலமாகும்.
பூஜைகள்
தொகுசித்தர்கள் 64 பேரும் முத்தி பெற்ற சித்திரை மாத திருவோணம் நட்சத்திர தினத்தில், இக்கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக குருபூஜை நடத்தப்படுகிறது. இதைத்தவிர, மாதம் தோறும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு பூஜைகளும், தின பூஜைகளும் நடத்தப்படுகின்றன. [3]
பராமரிப்பு
தொகுஇந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தருமபுர ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Myladuthurai.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-05-09.
- ↑ 3.0 3.1 தினமணி புத்தாண்டு மலர் 2014