ஐயப்பன் கோயில், கோயம்புத்தூர்
ஐயப்பன் கோயில், கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் சித்தாப்புதூரில் அமைந்துள்ளது.
ஐயப்பன் கோயில், சித்தாப்புதூர், கோயம்புத்தூர் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°01′15.1″N 76°58′22.3″E / 11.020861°N 76.972861°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் மாவட்டம் |
அமைவு: | சித்தாப்புதூர், கோயம்புத்தூர் |
ஏற்றம்: | 444 m (1,457 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயப்பன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 50 ஆண்டுகளுக்கு முன் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°01'15.1"N, 76°58'22.3"E (அதாவது, 11.020866°N, 76.972866°E) ஆகும்.
மூலவர்
தொகுமூலவர் மணிகண்டன், சக்கரத்தின்மீது அமர்ந்தபடி சின் முத்திரையுடன் உள்ளார். கேரள முறைப்படி இங்கு விநாயகர், பகவதி, சிவன், குருவாயூரப்பன், முருகன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. [1] இக்கோயிலை இரண்டாவது சபரிமலையாக பக்தர்கள் கருதுகிறார்கள். சபரிமலையில் நடத்தப்பெறுவது போலவே பூசைகளும், சமய விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.[2] பக்தர்கள் குழுவாக இணைந்து ஐயப்பனுக்காக ஒரு தனி கோயில் அமைக்க 1946 இல் திட்டமிட்டனர். இருப்பினும் 24 மார்ச் 1969 இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. 1972இல் கொடி மரம் அமைக்கப்பட்டது. பின்னர் அதற்கு தங்க முலாமிடப்பட்டது. இவ்வாறான ஓர் அமைப்பை தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே காணமுடியும்.[3]
திருவிழா
தொகுபிரதோஷம், ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். [1]
திறக்கும் நேரம்
தொகுகாலை 5,00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். [1]