சிந்தியல் வெண்பா
சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.
சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,
என்பனவாம்.
மேலும்
- ஒரு விகற்பச் சிந்தியல் வெண்பா
- பல விகற்பச் சிந்தியல் வெண்பா
என்னும் பாகுபாடுகளும் உண்டு. [1] இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா விளக்கங்களில் ஒரு விகற்பச் சிந்தியல் வெண்பாக்கள் காட்டப்பட்டுள்ளன. இங்குப் பல விகற்பச் சிந்தியல் வெண்பாக்கள் காட்டப்பட்டுள்ளன.
- இன்னிசை
சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக நாடன் சுனை
- நேரிசை
முல்லை முறுவலித்துக் காட்டின; மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற; போயினார்
திண்டேர் வரவுரைக்கும் கார்
மேற்கோள்
தொகு- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 176