சினெப்

வேதிச் சேர்மம்

சினெப் (Zineb) என்பது {Zn[S2CN(H)CH2CH2N(H)CS2]}n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கட்டமைப்பு அடிப்படையில் இதை ஒருங்கிணைப்பு பலபடி என்று வகைப்படுத்துகிறார்கள். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் ஒரு பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது[1].

சினெப்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக ஈத்தேன்-1,2-டையில்பிசு(டைதயோகார்பமேட்டு)
வேறு பெயர்கள்
1,2 ஈத்தேன்டையிபிசு[டைதயோகார்பமோடைதயோயேட்டோ](2−) துத்தநாகம்,
டைத்தேன் இசட் -78, அபைடோரா, அமிட்டன்
இனங்காட்டிகள்
12122-67-7 Y
ChEBI CHEBI:52498 N
ChemSpider 2297309 N
EC number 235-180-1
InChI
  • InChI=1S/C4H8N2S4.Zn/c7-3(8)5-1-2-6-4(9)10;/h1-2H2,(H2,5,7,8)(H2,6,9,10);/q;+2/p-2 N
    Key: AMHNZOICSMBGDH-UHFFFAOYSA-L N
  • InChI=1/C4H8N2S4.Zn/c7-3(8)5-1-2-6-4(9)10;/h1-2H2,(H2,5,7,8)(H2,6,9,10);/q;+2/p-2
    Key: AMHNZOICSMBGDH-NUQVWONBAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C15232 Y
பப்கெம் 3032296
வே.ந.வி.ப எண் ZH3325000
  • [Zn+2].[S-]C(=S)NCCNC(=S)[S-]
பண்புகள்
C4H6N2S4Zn
வாய்ப்பாட்டு எடை 275.8 கி/மோல் (ஒருமம்)
தோற்றம் வெளிர் மஞ்சள் தூள்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (Xi)
உணர்திறன் சேர்மம்
R-சொற்றொடர்கள் R37 R43
S-சொற்றொடர்கள் (S2) S8 S24/25 S46
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

நபாம் எனப்படும் எத்திலீன்பிசு(டைதயோகார்பமேட்டு) சோடியம் உப்பை துத்தநாக சல்பேட்டுடன் சேர்த்து சூடுய்படுத்துவதால் சினெப் உருவாகிறது. இச்செயல்முறையில் நபாமும் துத்தநாக சல்பேட்டும் ஒரு தெளிக்கும் கோபுரத்தில் கலக்கப்படுகின்றன. பட்டுப்போன்ற மென்மையான தோலுடைய பூஞ்சைக் காளான்கள், துரு, செந்தீச்சுவாலை முதலியவற்றை கட்டுப்படுத்த சினெப் பயன்படுகிறது[1]. அமெரிக்காவில் ஒரு காலத்தில் இதை பொதுவான ஒரு பூச்சிக் கொல்லியாக பதிவு செய்திருந்தார்கள். இருப்பினும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் சிறப்பு ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அனைத்துப் பதிவுகளும் இரத்து செய்யப்பட்டன. பல நாடுகளில் சினெப்பின் பயன்பாடு தொடர்ந்தது.

கட்டமைப்பு

தொகு

சினெப் சேர்மம் துத்தநாகமும் டைதயோகார்பமேட்டும் சேர்ந்த பல்லுருவ அணைவுச் சேர்மமாகும். இப்பலபடியில் Zn(டைதயோகார்பமேட்டு)2 துணை அலகுகள் ஓர் எத்திலீன் (-CH2CH2-) பின்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன[2]. இதற்குரிய ஆதாரச் சேர்மம் [Zn(S2CNEt2)2]2 ஆகும். இதில் ஒரு சோடி நான்முக துத்தநாக மையங்கள் ஒரு கந்தக மையத்துடன் பாலம் அமைத்துள்ளன[3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Fungicides, Agricultural, 2. Individual Fungicides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.o12_o06. 
  2. R. Engst, W. Schnaak (1974). Gunther F.A.. ed. "Residues of dithiocarbamate fungicides and their metabolites on plant foods". Residue Reviews (New York, NY: Springer) 52: 45-6. doi:10.1007/978-1-4615-8504-6_3. 
  3. Bonamico, M.; Mazzone, G.; Vaciago, A.; Zambonelli, L., "Structural studies of metal dithiocarbamates. III. The Crystal and Molecular Structure of Zinc Diethyldithiocarbamate", Acta Crystallogr. 1965, volume 19, pp. 898-909. எஆசு:10.1107/S0365110X65004620
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினெப்&oldid=2750190" இலிருந்து மீள்விக்கப்பட்டது