சினேகா துபே

சினேகா துபே (Sneha Dubey) இந்திய வெளியுறவுப் பணி[1] அதிகாரியான இவர் தற்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் முதல் செயலராக பணிபுரிகிறார்.[2] 26 செப்டம்பர் 2021 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இந்தியாவுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் குறித்து தவறாகப் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதிக்கு பதிலாடியாக, சினேகா துபே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடு செய்வதை கண்டித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகழிடமாக உள்ளதை உலக நாடுகளுக்கு தன் பேச்சின் மூலம் எடுத்துரைத்தார்.[3]

வரலாறு

தொகு

ஜார்கண்ட் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட சினேகா துபேயின் பெற்றோர்கள் தற்போது புணேவில் பணிபுரிகிறார்கள். கோவாயில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா துபே, புணே நகரத்தில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் இளகலை படிப்பை முடித்தார். பின்னர் புது தில்லி உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பும், பன்னாட்டு படிப்பில் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற சினேகா துபே 2012-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணிக்கு தேர்வானார். சினேகா துபே இந்திய வெளியுறவுத் துறை சார்பாக, 2013 முதல் 2014-ஆம் ஆண்டு வரை லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளுக்கான கீழ்நிலைச் செயலராக பணிபுரிந்தார். ஆகஸ்டு, 2014-ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரத்தில் இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராக பணிபுரிந்தார். தற்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் முதல் செயலராக பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா_துபே&oldid=3289156" இலிருந்து மீள்விக்கப்பட்டது