சின்னபூவே மெல்லபேசு (தொலைக்காட்சித் தொடர்)

சின்னபூவே மெல்லபேசு என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 4 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு காதல் மெகாத்தொடர் ஆகும். 12 அக்டோபர் 2020 அன்று வெளியான இத்தொடரில் ஷ்ரத்தா ஆர்யா, தீரஜ் தூபர், மனித் ஜவுரா மற்றும் அஞ்சும் ஃபக்கிஹ் ஆகியோர் நடிக்கிறார்கள்.[1][2]

சின்னபூவே மெல்லபேசு
வேறு பெயர்ஜாதக விதி
வகைகாதல்
நாடகம்
மெகாதொடர்
உருவாக்கம்ஏக்தா கபூர்
எழுத்துரேகா மோடி
திரைக்கதைஅனில் நாக்பால்
மிருனல் திரிபாதி
கதை
 • கவிதா நாக்பால்
 • அனில் நாக்பால்
இயக்கம்
 • சமீர் குல்கர்னி
 • அபிஷேக் குமார்.
 • ஆர். பால்
 • அமன் வார்பே
நடிப்பு
 • ஷ்ரத்தா ஆர்யா
 • தீரஜ் தூபர்
 • மனித் ஜவுரா
 • அஞ்சும் ஃபக்கிஹ்
முகப்பு இசைலலித் சென்
ஆஷிஷ் ரெகோ
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மொழிமாற்றம்)
பருவங்கள்1
அத்தியாயங்கள்1200
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படவி அமைப்புமல்டி கேமரா
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி மோஷன் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்12 அக்டோபர் 2019 (2019-10-12) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்இனிய இரு மலர்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்
தயாரிப்பு இணையதளம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனிய இரு மலர்கள் என்ற தொடரின் கிளைக்கதையாக இத்தொடர் அமைந்துள்ளது.[3]

கதைச்சுருக்கம்

தொகு

ப்ரீத்தா என்ற பெண், லூத்ரா குடும்பத் தலைவியான பானி என்பவருக்கு பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். பானியின் மூத்த பேரன் ரிஷப், நாளடைவில் ப்ரீத்தாவை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கினார்; இளைய பேரன் கரண், ப்ரீத்தாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார். ரிஷப், ப்ரீத்தாவைக் காதலித்தாலும் திருமணத்தில் நாட்டமின்றி இருந்தார். ப்ரீத்தா அவரிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு சம்மதிக்க வைக்கிறார். ஷெர்லினுடன் திருமணம் என்று தெரியாமல் ப்ரீத்தாவை திருமணம் செய்யப்போவதாக நினைத்துக்கொண்டு ரிஷப் சம்மதித்து விடுகிறார். பிறகு ரிஷப், உண்மை தெரிந்ததும் வேறு வழியின்றி ப்ரீத்தாவுடனான தனது காதலை மனதில் புதைத்துவிட்டு ஷெர்லினை நிச்சயம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார்.

ஷெர்லின் அனைவரும் நினைப்பது போல் நல்லவர் இல்லை என்று ப்ரீத்தா உணர்கிறார். மேலும் ஷெர்லினுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பதையும் அறிந்த ப்ரீத்தா, தன் சந்தேகத்தை கரணிடம் தெரிவிக்கிறார். முதலில் ப்ரீத்தா பேச்சை நம்பாத கரண், பிறகு ஆதாரங்களை தெரிந்துகொண்டு உண்மையை உணர்ந்தார். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்றுவதற்காக கரண்-ப்ரீத்தா இணைந்து செயல்படுகின்றனர். இந்த இணைவு நாளடைவில் நட்பாக மாறியது.

இதற்கிடையில், ப்ரீத்தாவிற்கு ஷெர்லினின் ஆண் நண்பரான ப்ருத்வியுடன் நிச்சயம் செய்யப்படுகிறது. ப்ருத்வியின் உண்மை ஷெர்லினை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. எனினும் ப்ருத்வியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரிஷப், அவர் ப்ரீத்தாவிற்கு ஏற்ற துணையாக இருக்க மாட்டார் என்று உணர்ந்தார். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்ற கரண்-ப்ரீத்தா முயன்று வந்த அதே வேளையில், ப்ருத்வியிடம் இருந்து ப்ரீத்தாவைக் காப்பாற்ற கரண்-ரிஷப் முயன்றனர்.

ரிஷப் மற்றும் ஷெர்லின் திருமணத்தை நிறுத்த ப்ரீத்தா தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்தார். எனினும் திருமண நாளில் ஷெர்லின் திட்டத்தால் ப்ரீத்தாவிற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு ரிஷப் மற்றும் ஷெர்லின் திருமணம் நடந்துவிடுகிறது. இதனால் வருத்தமும் கோபமுமடைந்த கரண் தனது சகோதரனின் வாழ்க்கையைக் காப்பாற்றாமல் அழித்ததற்காக ப்ரீத்தாவை பழிவாங்க சபதம் செய்கிறார். சில வாரங்களுக்குப் பிறகு, பிருத்வியுடன் ப்ரீத்தாவுக்கு நடக்கவிருந்த திருமணத்தில், மணமகன் கோலத்தில் முகத்தை மறைத்து வந்த கரண், பழிவாங்கும் நோக்கில் ப்ரீத்தாவை மணக்கிறார். ஆனால் தான் ப்ரீதாவை காதலிப்பதால் திருமணம் செய்ததாகக் கூறி ப்ரீத்தாவையும் அவரது குடும்பத்தாரையும் நம்ப வைக்கிறார். திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் வழியில் கரண் ப்ரீத்தாவிடம் தன் வெறுப்பையும் பழிவாங்கும் உணர்வையும் வெளிப்படுத்தினார். மேலும் அந்த நள்ளிரவு நேரத்தில் ப்ரீத்தாவை சாலையில் தனியாக விட்டுவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய கரண், பழிவாங்குவதற்காக தான் ப்ரீதாவை திருமணம் செய்ததாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே கரணின் சிறுவயது தோழியான மஹிரா கண்ணா என்பவர் லூத்ரா வீட்டிற்கு வருகிறார். அவர் கரணை காதலிப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மஹிராவுடன் நிச்சயதார்த்தம் செய்ய லூத்ரா குடும்பம் கரணிடம் வலியுறுத்தினர். கரணின் திருமண நாளில், ஷெர்லின் மற்றும் மஹிரா தங்கள் உண்மையை அறிந்திருப்பதால் கரணின் தந்தையான மகேஷைக் கொன்றுவிடத் திட்டமிட்டு பேசிக் கொண்டிருந்ததைப் ப்ரீத்தா கேட்டுவிடுகிறார். இதனால் ப்ரீத்தா அன்று கரண் செய்தது போலவே மணமகள் கோலத்தில் முகத்தை மறைத்து வந்து, கரனை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அதிர்ந்த லூத்ரா குடும்பத்தினர் கோபமடைந்து ப்ரீத்தாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். எனினும் மனம் தளராத ப்ரீதா பெண்கள் உரிமைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் காவல்துறையுடன் லூத்ரா வீட்டுக்குத் திரும்புகிறார், அவர்கள் ப்ரீத்தாவுக்கு பக்கபலமாக வாதிட்டு, லூத்ரா குடும்பத்தினரிடம் அவரை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினர். பிறகு கரண், ப்ரீத்தாவை தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். படிப்படியாக, அவர்கள் இருவரும் மீண்டும் தங்களிடையே உணர்வுகளையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டனர்.

தனது தொழிலில் தோல்வியடைந்ததால் பணத்திற்காக கிருத்திகாவை திருமணம் செய்து கொள்ள அக்ஷய் முடிவு செய்கிறார். அக்ஷய்க்கு ஏற்கனவே மேகா என்ற மனைவியும் ருச்சிக்கா என்ற காதலியும் இருந்தனர். அக்ஷய் பற்றிய உண்மைகளை அறிந்த ப்ரீத்தா, திருமணத்தை நிறுத்த முயற்சித்தார்.

நடிகர்கள்

தொகு

முக்கிய கதாபாத்திரங்கள்

தொகு
 • ஷ்ரத்தா ஆர்யா - பிரீத்தா கரண் லூத்ரா, சரளா-ரகுவீரின் மகள், கரணின் மனைவி
 • தீரஜ் தூபர் - கரண் லூத்ரா, ரேகா-மஹேஷின் இளைய மகன்
 • மனித் ஜவுரா - ரிஷப் லுத்ரா, ரேகா-மஹேஷின் மூத்த மகன், ஷெர்லினின் கணவர்

துணை கதாபாத்திரங்கள்

தொகு
 • அஞ்சும் ஃபக்கிஹ் - ஸ்ருதி அரோரா, சரளா-ரகுவீரின் இளைய மகள், ப்ரீத்தாவின் தங்கை, சமீரின் காதலி
 • ருஹி சதுர்வேதி - ஷெர்லின் குரானா, ரிஷப்பிற்கு நிச்சயமானவர்
 • சஞ்சய் கக்னானி- பிருத்வி மல்ஹோத்ரா, ஷெர்லினின் நண்பன்
 • அபிஷேக் கபூர் - சமீர் லூத்ரா, ரிஷப்-கரண் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரன், ஸ்ருதியின் காதலன்
 • மது ராஜா - சரளாவின் மாமியார், பிரக்யா, ப்ரீத்தா, அம்மு மற்றும் ஸ்ருதி ஆகியோரின் பாட்டி
 • சுப்ரியா சுக்லா - சரளா அரோரா, ரகுவீரின் மனைவி - பிரக்யா, அம்மு, ப்ரீத்தா, ஸ்ருதி ஆகியோரின் தாய்
 • அனிஷா ஹிந்துஜா - ராக்கி லூத்ரா, மஹேஷின் மனைவி - ரிஷப், கரண் ஆகியோரின் தாய்
 • நவீன் சைனி - மஹேஷ் லூத்ரா, ரேகாவின் கணவர் - ரிஷப், கரண் ஆகியோரின் தந்தை
 • நீலம் மெஹ்ரா - பானி லூத்ரா, லூத்ரா குடும்பத் தலைவி, மகேஷ், சுரேஷ் மற்றும் கரீனா ஆகியோரின் தாய்
 • உஷா பச்சனி - கரீனா லூத்ரா, மகேஷ் மற்றும் சுரேஷின் சகோதரி, கிருத்திகாவின் தாய்
 • ஸ்வாதி கபூர் - மஹிரா கண்ணா, கரணை ஒருதலையாக காதலிப்பவர்
 • நவீன் ஷர்மா - அக்ஷய் அஹுஜா, ருச்சிகாவின் காதலர், மேகாவின் கணவர், கிருத்திகாவிற்கு நிச்சயமானவர்

மேற்கோள்கள்

தொகு
 1. "Chinna Poove Mella Pesu Serial (Zee Tamil) 2020: Cast, All Episodes, Story, Start Date, Telecast Time, Watch Online".
 2. "Zee Tamil to launch a new show 'Chinna Poove Mella Pesu'". Medianews4u.com.
 3. "Chinna Poove Mella Pesu | October 12th Onwards | Monday - Saturday, 3 PM". Zee Tamil. Youtube.

வெளி இணைப்புகள்

தொகு