சின்னப்பல் மரநாய்
சின்னப்பல் மரநாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | விவேரிடே
|
பேரினம்: | ஆர்க்டோகாலிடியா மெரியம், 1897
|
இனம்: | ஆ. திரிவிர்கட்டா[2]
|
இருசொற் பெயரீடு | |
ஆர்க்டோகாலிடியா திரிவிர்கட்டா கிரே, 1832 | |
துணைச்சிற்றினம் | |
| |
சின்னப்பல் மரநாய் பரம்பல் |
சின்னப்பல் மரநாய் (Small-toothed palm civet)(ஆர்க்டோகாலிடியா திரிவிர்கட்டா) என்பது முக்கோடு மரநாய் என்று அழைக்கப்படுகிறது. இது தென்கிழக்காசியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது. இது இந்தியாவின் அசாம் மாநிலம் முதல் இந்தோசீனா மற்றும் மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா, பாங்கா ஆகிய நாடுகளிலும், ஜாவா, போர்னியோ மற்றும் இந்தோனேசியாவின் அருகிலுள்ள பல சிறிய தீவுகளிலும் காணப்படுகிறது.[1]
விளக்கம்
தொகு1832-ல் ஜான் எட்வர்டு கிரே இந்த மரநாய் குறித்த முதல் அறிவியல் விளக்கம் நெதர்லாந்தின் லைடனில் உள்ள ரிஜ்க்ஸ்மியூசியம் வான் நேடுர்லிஜ்கே ஹிஸ்டோரியின் சேகரிப்பில் உள்ள மாலுகு தீவுகளின் விலங்கியல் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இது கருப்பு சாம்பல் நிறத்தில், கருப்பு பாதங்கள் மற்றும் பின்புறத்தில் மூன்று கருப்பு நீளமான கோடுகளுடன் காணப்படும்[3]
இது ஒற்றை சிற்றினம் கொண்ட பேரினமாகும். ஆர்க்டோகாலிடியாவில் ஆர்க்டோ என்றால் 'கரடி என்றும் காலிடா என்றால் சிறிய மரநாய் என்று பெயர். சிற்றினப் பெயரான திரிவிர்கடா என்ற என்பதற்கு இலத்தீன் மொழியில் 'மூன்று-கோடுகள்' என்று பொருள்.
உடலமைப்பு
தொகுசின்னப்பல் மரநாய் நடுத்தர உயரமுடையது. இதன் எடை 2.4 கிலோ (5.3 பவுண்ட்) வரையும் உடல் நீளம் 53 செ. மீ. வாலானது 58 செ. மீ. வரை இருக்கும். இது குறுகிய உரோமங்களைக் கொண்டுள்ளது. இந்த உரோமங்கள் பொதுவாகப் பழுப்பு அல்லது மெருகு நிறத்தில் இருக்கும். தலை அடர் சாம்பல் நிறமுடையது. இதன் முகவாய் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடன் (மூக்கிலிருந்து நெற்றி வரை) காணப்படும். பெண் மரநாய்களுக்கு மட்டும் பெரினியல் எனப்படும் வாசனை சுரப்பி உள்ளது. இது பிறப்பு உறுப்புக்கு அருகில் அமைந்துள்ளது[4]
இனப்பெருக்கம்
தொகுஇது அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. இதன் உணவாகப் பூச்சிகள், சிறிய பாலூட்டிகள், கூடு கட்டும் பறவைகள், பழங்கள், தவளைகள் மற்றும் பல்லிகள் ஆகும். மற்ற பனை மரநாய்களைப் போலவே இத பழக்கவழக்கங்கள் தனித்து, மரங்களில் வாழ்ந்து இரவு நேரங்களில் இரை தேடுபவையாக உள்ளது. இதன் கர்ப்ப காலம் 45 நாட்கள். சராசரியாக 3 குட்டிகள் ஈனும். பிறந்த குட்டிகள் 11 நாட்களில் கண்களைத் திறக்கின்றன. இரண்டு மாதங்கள் வரை தாய் பாலூட்டும். இது வருடத்திற்கு இரண்டு முறை இனப்பெருக்கம் மேற்கொள்ளும். ஆனால் குறிப்பிட்ட இனச்சேர்க்கை காலம் இல்லை. சுமார் 11 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இந்தச் சிற்றினமும் தென்கிழக்கு ஆசிய வன விலங்குகளைப் போலவே காடழிப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Willcox, D.H.A.; Duckworth, J.W.; Timmins, R.J.; Chutipong, W.; Choudhury, A.; Roberton, S.; Long, B.; Hearn, A. et al. (2016). "Arctogalidia trivirgata". IUCN Red List of Threatened Species 2016: e.T41691A45217378. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41691A45217378.en. https://www.iucnredlist.org/species/41691/45217378. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 549–550. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
{{cite book}}
:|editor=
has generic name (help); External link in
(help)CS1 maint: multiple names: editors list (link)|title=
- ↑ Gray, J.E. (1832). "On the Family of Viverridae and its generic subdivisions; with an enumeration of the Species of Paradoxurus, and Characters of several new ones". Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London (Part 2): 63–68. https://archive.org/details/lietuvostsrmoksl30liet/page/68/mode/1up.
- ↑ "Musang Akar, Satwa Nokturnal Penghuni Lebatnya Hutan Khas Kalimantan". merdeka. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help)