சின்ன உப்புக்கொத்தி

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Charadrius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

சின்ன உப்புக்கொத்தி ( Charadrius alexandrinus ) என்பது சராத்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கடற்பறவை (40-44 கிராம்) ஆகும். இது உப்பு ஏரிகள், குளங்கள், கடற்கரைகள், மணல் திட்டுகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றின் கரைகளில் இனப்பெருக்கம் செய்கிறது.[2][3]

சின்ன உப்புக்கொத்தி
இனப்பெருக்க இறகு நிறத்தோடு ஆண் பறவை, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Charadrius
இனம்:
இருசொற் பெயரீடு
Charadrius alexandrinus
லின்னேயஸ், 1758
Subspecies
  • C. a. alexandrinus
  • C. a. seebohmi
Range of Ch. alexandrinus     Breeding      Resident      Non-breeding      Vagrant (seasonality uncertain)
வேறு பெயர்கள்
  • Charadrius cantianus Latham, 1801 (syn. of C. a. alexandrinus)
  • Charadrius elegans Reichenow, 1904 (syn. of C. a. alexandrinus)

விளக்கம்

தொகு

இவை காடையைவிட அளவில் சிறியவையாக சுமார் 17 செ.மீ. நீளம் இருகும். பெரும்பாலும் பட்டாணி உப்புக்கொத்தியை ஒத்த தோற்றம் கொண்டது. இதன் கால்கள் கருஞ்சாம்பல் நிறத்தில் இருப்பது கொண்டும் வால் இறகுகளில் இருபுறமும் மூன்று இறகுகள் வெண்மையாக இருப்பது கொண்டு வேறுபாடு அறியலாம். பட்டாணி உப்புக்கொத்தியின் வாலில் இரு புறமும் ஓரத்தில் ஒவ்வொரு இறகுதான் வெண்மையாக இருக்கும். இதன் வாலிறகுகளில் நுனிப்பகுதி மட்டும் வெண்மை நிறங்கொண்ட வாலிறகுகள் இல்லை. இதன் கண் வழியாகச் செல்லும் கருப்புப் பட்டை அகலம் குறைந்து நிறங்குன்றிப் பழுப்பாகக் காணப்படும். இனப்பெருக்கக் காலத்தில் கழுத்தின் வெள்ளை வளையத்தைச் சார்ந்த கருப்பு வளையம் மறைந்துவிடும். இவற்றில் ஆண் மற்றும் பெண் என இரு பறவைகளுக்கும் வெளிறிய இறகுகள், வெள்ளை நிற அடிப்பகுதி, சாம்பல்/பழுப்பு நிற முதுகு, கருமையான கால்கள், கருமையான அலகு போன்றவற்றைக் கொண்டிருக்கும். இருப்பினும், கூடுதலாக ஆண் பறவைகளுக்கு மிகவும் கருமையான முழுமையற்ற மார்பகப் பட்டைகள் மற்றும் அவற்றின் தலையின் இருபுறமும் கருமையான அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. எனவே சின்ன உப்புக்கொத்தி பால் ஈருருமை கொண்டதாக கருதப்படுகிறது.[4]

பரவல்

தொகு

சின்ன உப்புக்கொத்தி 10º முதல் 55º வரையிலான அட்சரேகைகள் வரையிலான பெரிய புவியியல் பரப்பளவில் காணப்படுகின்றது. இது வட ஆப்பிரிக்காவின், செனகல் போன்ற பிரதான நிலப்பரப்பிலும், கேப் வர்டி போன்ற தீவுக்கூட்டங்களிலும், நடு ஆசியாவில், சீனா போன்ற பகுதிகளிலும், ஐரோப்பாவில் எசுபானியா மற்றும் ஆத்திரியாவில் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவுக்கு கொஞ்சம் பறவைகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் வலசை போகின்றன. அதேசமயம் பல்வேறு தீவுகளில் வாழும் பறவைகள் வலசை போவதில்லை.[5][6] இதன் பொது ஆங்கிலப் பெயரானது கென்ட் கவுண்டியில் இருந்து உருவானது. இது ஒரு காலத்தில் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது 1979 முதல் பிரிட்டனில் இனப்பெருக்கம் செய்யவில்லை.[7]

இனப்பெருக்கம்

தொகு

சின்ன உப்புக்கொத்திகள் தரையில் கூடு கட்டும் பறவைகளாகும். இவை பெரும்பாலும் அடர்த்தியான தாவரங்களோ, மனித நமாட்டமோ அற்ற, ஈரப்பதமான திறந்தவெளி பகுதிகளில் கூடு கட்ட விரும்புகின்றன. இவை தங்கள் கூடுகளை தரையில் குழிவான இடத்தில் கூழாங்கற்கள், புற்கள், இலைகள் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுகின்றன.[8][9] சாதாரணமாக இவை கூட்டில் மூன்றி அல்லது நான்கு முட்டைகளை இடுகின்றன. முட்டையானது பசுமை கலந்த மணற் பழுப்பு நிறத்தில் இருக்கும். கரும்பழுப்பு கறைகளும் மெல்லிய கோடுகளும் முட்டைகளில் காணப்படும். ஆணும் பெண்ணும் என இருபாலினத்தவையும் 20-25 நாட்கள் அடைகாக்கும். பெரும்பாலும் பகலில் பெண் பறவையும், இரவில் ஆண் பறவையும் அடைகாக்கும்.

உணவு

தொகு

பெரும்பாலான உப்புக்கொத்திகளைப் போலவே, சின்ன உப்புக் கொத்திகள் பெரும்பாலும் பூச்சியுண்ணி ஆகும். சுற்றுச்சூழலைப் பொறுத்து பெரிய அளவிலான கணுக்காலிகள் மற்றும் முதுகெலும்பிலிகளை உணவாக கொள்கின்றன.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2019). "Charadrius alexandrinus". IUCN Red List of Threatened Species 2019: e.T22727487A155485165. https://www.iucnredlist.org/species/22727487/155485165. பார்த்த நாள்: 2 January 2020. 
  2. Székely, T., A. Argüelles-Ticó, A. Kosztolányi and C. Küpper. 2011.
  3. del Hoyo, J., Collar, N.J., Christie, D.A., Elliott, A. and Fishpool, L.D.C. 2014.
  4. Message, S. and Taylor, D.W. 2005.
  5. Meininger, P., Székely, T., and Scott, D. 2009.
  6. Kosztolányi, A., Javed, S., Küpper, C., Cuthill, I., Al Shamsi, A. and Székely, T. 2009.
  7. "Focus on: Kentish Plover". BirdGuides (in ஆங்கிலம்). 2020-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  8. AlRashidi, M., Long, P.R., O’Connell, M., Shobrak, M. & Székely, T. 2011.
  9. Szentirmai, I. and Székely, T. 2002.
  10. Kentish Plover (Charadrius alexandrinus) European birds online guide (no date) Available at: http://www.avibirds.com/html/Kentish_Plover.html (Accessed: 16 January 2017)
  11. Székely, T., Karsai, I. and Kovazs, S. 1993.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_உப்புக்கொத்தி&oldid=3929843" இலிருந்து மீள்விக்கப்பட்டது