சின்மோடேக் எரிமலை
சின்மோடேக் (Shinmoedake,新燃岳) யப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. எரிமலை வெடிப்புகள் 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, மற்றும் 2009 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.
சின்மோடேக் (Shinmoe-dake)[1] | |
---|---|
சூலை 2008இல் சின்மோடேக் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,421 m (4,662 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | ககோஷிமா மாகாணம், கியூஷூ, யப்பான் |
மூலத் தொடர் | கிரிஷிமா மலைத்தொடர் |
நிலவியல் | |
பாறையின் வயது | 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக |
மலையின் வகை | இயக்கத்திலுள்ள எரிமலை |
கடைசி வெடிப்பு | சனவரி 2011 |
இந்த எரிமலை அண்மையில் சனவரி 19, 2011 அன்று புகையத் தொடங்கியுள்ளது. சனவரி 27, 2011 நிலவரப்படி எச்சரிக்கை நிலை மூன்றை எட்டியுள்ளது.[1] பிப்ரவரி 1 அன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது. இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் சன்னல்களை உடைக்குமளவு இருந்தது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Earthquakes and volcanoes, U-Tokyo. "Eruption of Shinmoe-dake (a stratovolcano of the Kirishima volcano group), Japan, 2011". University of Tokyo. Outreach and Public Relations Office. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
- ↑ சப்பானிய எரிமலை வெடிததது
வெளியிணைப்புகள்
தொகு