சின்லாந்து தேசிய இராணுவம்

சின் தேசிய இராணுவம் (Chin National Army),தென்கிழக்காசியா நாடான மியான்மரின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தில் வாழும் சின் மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும்.இது சின் தேசிய முன்னணி அமைப்பின் கீழ் செயல்படுகிறது. தற்போது சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதி சின் தேசிய இராணுவத்தின் கீழ் உள்ளது. இந்த இராணுவம் 20 பிப்ரவரி 1988 அன்று சின் தேசிய முன்னணியின் ஒரு அங்கமாக நிறுவப்பட்டது. 6 சனவரி 2012 அன்று மியான்மர் அரசு மற்றும் சின் தேசிய முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளது.[3]மியான்மர் கூட்டாட்சித் தத்துவததில் நம்பிக்கையுள்ள ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்பு குழுவில் சின் தேசிய இராணுவம் ஒரு உறுப்பினராக உள்ளது.

சின் தேசிய இராணுவம்
ချင်းအမျိုးသားတပ်မတော်
சின் தேசிய இராணுவத்தின் கொடி
தலைவர்கள்பிரிகேடியர் குன் லெய், தலைமைப் படைத்தலைவர்
கர்ணல் பான் தியு, துணை தலைமைப் படைத்தலைவர்
செயல்பாட்டுக் காலம்20 பெப்ரவரி 1988 (1988-02-20)[1]-தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)சின்லாந்து
சித்தாந்தம்சின் தேசியம், மியான்மர் கூட்டாட்சி தத்துவம்
அளவு6,000+ (2024) (இராணுவம்)
10,000+ (துணை இராணுவம்)
தலைமையகம்கேம்ப் விக்டோரியா, சின்லாந்து சின் மாநிலத்திற்குள்)[2]
இணையதளம்https://nenow.in/neighbour/myanmar/myanmar-based-zro-and-cnf-sign-peace-agreement-in-mizoram.html
கூட்டாளிகள்ஐக்கிய தேசியவாத கூட்டமைப்புக் குழு
  • கரேன் தேசிய விடுதலை இராணுவம்
  • கரென்னி இராணுவம்
  • மோன் தேசிய விடுதலை இராணுவம்
  • வடக்கு சான் மாநில இராணுவம்
எதிரிகள்அரசு சார்பான அமைப்புகள்
  •  மியான்மர்
    • மியான்மர் இராணுவம்
    • மியான்மர் காவல் படை
யுத்தங்கள் மற்றும் போர்கள்
மியான்மர் நாட்டின் மேற்கில் உள்ள சின் மாநிலப் பகுதிகளை (பச்சை நிறம்) தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் சின் தேசிய இராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள்

வரலாறு

தொகு

சின்லாந்தின் சின் மாணவர்களால் நிறுவப்பட்ட அரசியல் குழுவான சின் தேசிய முன்னனியின் இராணுவமாக சின் தேசிய இராணுவம் செயல்படுகிறது.[4]இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு சின் தேசிய இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் வழங்குகிறது.[4][5]இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் இதன் தலைமையிடம் 2005ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chin National Day
  2. Fishbein, Emily (9 January 2023). "Chin nationalism 'blossoms' on northwestern front against junta". Frontier Myanmar. https://www.frontiermyanmar.net/en/chin-nationalism-blossoms-on-northwestern-front-against-junta/. 
  3. "Chin National Front | Myanmar Peace Monitor" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 12 January 2024. பார்க்கப்பட்ட நாள் 24 July 2024.
  4. 4.0 4.1 4.2 "Military Coup Renews Rebellions in Myanmar's Kayah and Chin States". The Irrawaddy. 28 June 2021. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 24 July 2024.
  5. Minorities at Risk Project (2004). "Chronology for Rohingya (Arakanese) in Burma". UNHCR Web Archive. UNHCR. பார்க்கப்பட்ட நாள் 2024-07-24.