சின் மக்கள்
சின் மக்கள் (பர்மியம்: ချင်းလူမျို) வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மற்றும் இந்திய-மியான்மர் நாடுகளின் எல்லைப்புறங்களில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார்.[9] சின் இனக்குழுவில் 53 துணைக் குழுவினர் உள்ளனர். இம்மக்கள் குகி-சின்-நாகா மொழிகளைப் பேசுகிறார்கள். இம்மொழிகள் பெரும்பாலும் பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாதவை. ஆனால் நெருங்கிய தொடர்புடையவை. பிரித்தானிய ஊடகமான பிபிசி செய்தியின்படி, சின் மக்கள் பர்மாவில் மிகவும் துன்புறுத்தப்படும் சிறுபான்மைக் குழுக்களில் ஒன்றாகும் [8] இந்த மக்கள் பெரும்பாலும் வடகிழக்கு இந்தியாவை ஒட்டிய மியான்மரின் சின் மாநிலத்தில் அதிகம் வாழ்கின்றனர்.
மியான்மரில் சின் மக்கள், 2007 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~8,000,000[1] (2011) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | ~6,500,000[1] |
மணிப்பூர் |
|
மிசோரம் |
|
நாகாலாந்து |
|
மியான்மர் | 1,500,000[7] |
வங்காளதேசம் | 10,000 |
மொழி(கள்) | |
குகி-சின்-நாகா மொழிகள் | |
சமயங்கள் | |
பெரும்பான்மை: கிறித்தவம் சிறுபான்மை: இந்து சமயம் (மெய்தெய் மக்கள்),பௌத்தம், பழங்குடி சமயங்கள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மிசோ மக்கள், கட்சின் மக்கள், யி மக்கள் |
சொற்பிறப்பியல்
தொகுஆரம்பத்தில் மியான்மரில் பர்மியர்களால் பயன்படுத்தப்பட்ட 'சின்' என்ற சொல் மியான்மரின் மேற்கு எல்லையில் உள்ள அனைத்து மலைவாழ் பழங்குடியினரையும் குறிக்கிறது. இருப்பினும் வடகிழக்கு இந்தியாவின் மலைவாழ் பழங்குடியினரை சின்-குகி மற்றும் நாகா மக்கள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குகி மக்கள் பொதுவாக நாகாலாந்தின் தெற்கே வாழ்கின்றனர்.[9] சின்-குகி-மிசோ மக்களின் அசல் பெயரை 'சின்லுங்/குல்/சின்லுங்' பயன்படுத்துகின்றனர்.
வரலாறு மற்றும் அரசியல்
தொகுசின் மக்கள் கிபி ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சின்ட்வின் பள்ளத்தாக்கு வழியாக பர்மாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்து 1300-1400களில் தற்போதைய சின் மாநிலத்தில் குடியேறியதாக கருதப்படுகிறது. சின் மக்கள் வாய்வழி மரபுகளை நடைமுறைப்படுத்துகிறது மற்றும் எழுதப்பட்ட வரலாற்று பதிவுகள் இல்லை.
ஆங்கிலேயர்கள் முதன்முதலில் பர்மாவை 1824இல் கைப்பற்றி, 1886-ல் ஆட்சியை நிறுவி, 1948-ல் பர்மா சுதந்திரம் பெறும் வரை அதிகாரத்தில் இருந்தனர். 1948 இல் பிரிட்டனில் இருந்து பர்மா சுதந்திரம் பெற்றது. சின் மக்கள் அதன் பாரம்பரிய தலைமை ஆட்சியைத் தொடர்வதற்குப் பதிலாக ஒரு ஜனநாயக அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. சின் தேசிய தினத்தை கொண்டாட அரசு அனுமதிக்கவில்லை. சின் தேசிய தினத்திற்குப் பதிலாக, சின் மாநில தினம் பிப்ரவரி 20 அன்று கொண்டாடப்படுகிறது. இது சின் மாநிலத்தில் பாரம்பரிய ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறியதைக் குறிக்கும் நாளாகும்.
1962இல் பர்மாவில் ஜெனரல் நீவின் இராணுவ ஆட்சி தொடங்கியவுடன் சின் மாநிலத்தின் புதிய ஜனநாயகம் திடீரென முடிவுக்கு வந்தது. இராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்த 1988 வரை நீ வின் ஆட்சியில் இருந்தார். இராணுவ ஆட்சிக்கு எதிரான இந்தக் காலகட்டத்தில்தான் சின் தேசிய முன்னணி மற்றும் அதன் ஆயுதப் பிரிவான சின் தேசிய இராணுவம் (CNA) வேகம் பெற்றது.[10] 2012 இல் சின் தேசிய இராணுவம், பர்மா இராணுவத்துடன் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தது. 2015 இல் சின் தேசிய இராணுவம் (CNA) ஒரு தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[11]
சின் பழங்குடி இனப் பிரிவுகள்
தொகுசின் மக்களிடையே சோமி, லாய், சன்னியாட், யாவ், யிண்டு, செந்தாங், ங்காவ்ன், மிசோ, ஜோடுங், டாய், தாடூ (குகி), காமி ம்ரோ-கிமி (வகுங்), மாடு, ஹ்மர், ஆஷோ போன்ற பல பழங்குடியினர் உள்ளனர்.[12] 1968 ஆம் ஆண்டில், லியான் யுக் என்ற ஒரு சின் அறிஞர், "சின்" என்ற சொல்லையும் அதே போன்ற பெயர்களை "மக்கள்" எனவும் வரையறுத்தார், மேலும் "சின்லாந்து" என்ற பெயர் நமது நாடு என்பதைக் குறிக்கிறது. இந்தியா, மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே சின் மக்கள் சிதறிக்கிடக்கின்றனர். இந்தியாவில், சின் மக்கள் மிசோரம் மாநிலத்தில் வாழ்கின்றனர் மற்றும் கணிசமான சின் மக்கள் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
பண்பாடு
தொகுசின் தேசிய தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று கொண்டாடப்படுகிறது. இது சின் மக்கள் அடிமை முறை அல்லது ஏகாதிபத்திய முறையை ஒழித்த நாளாகும். முதல் சின் தேசிய தினம் 1951ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.[13] மூங்கில் நடனம்[14], சர்லாம் (வெற்றி நடனம்), குவாங்காவி (ஒரு பெண் கூட்டத்தால் தூக்கிச் செல்லப்படுகிறாள்), ருகாத்லக்/செருவா மற்றும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் பல பாரம்பரிய நடனங்களை மக்கள் ஆடுகிறார்கள்.[15] சின் தேசிய தினத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பாரம்பரிய மல்யுத்தம் ஆகும்.[16] சின் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நகரம் அல்லது நகரத்திலும் அழகிப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஆடைகளை காட்சிப்படுத்தல், ஆடல், பாடல் போன்ற பிற நிகழ்வுகளும் சின் தேசிய தினத்தில் நடைபெறுகின்றன.[17] விழாக்காளில் சாபுட்டி/சபக்டுய் மற்றும் சாங் (அரிசி கேக்) போன்ற பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன.
ஆடை
தொகுசின் மக்கள் மாட்டு, ஃபலாம், டெடிம், ஸோ, தபோங், ஜொடுங், மிண்டாட், டா யிண்டு (கான்பெட்லெட்), மாரா போன்ற பல பாரம்பரிய உடைகள் அணிகின்றனர். இந்த பாரம்பரிய ஆடைகளுக்கு சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு ஆகியவை முக்கிய வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய ஆடைகள் என்று வரும்போது வளையல்கள், கழுத்தணிகள், மற்றும் மோதிரங்கள் முகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை நிறைவு செய்வதால் பெரும் பங்கு வகிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகள், திருமணங்கள், சின் தேசிய தினம் மற்றும் வேறு எந்த முக்கிய நிகழ்வுகளிலும் இதை அவர்கள் அணிவார்கள்[29]
விளையாட்டு
தொகுமல்யுத்தம் சின் மக்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.[18]
மொழி
தொகுசின் மக்களின் உட்பிரிவினர் 31 வெவ்வேறு வகைகயான மொழிகள் பேசுகின்றனர். இம்மொழிகள் மியான்மர், வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப்புறத்தில் பேசப்படுகிறது.[19]
மதம்
தொகுபாரம்பரிய சின் மக்கள் மூதாதையர் வழிபாட்டினர். இருப்பினும் 1800களின் பிற்பகுதியில், முதல் கிறிஸ்தவ மதமாற்றிகள் சின் மாநிலத்திற்கு வந்து, சின் பழங்குடி மக்களுக்கு கிறிஸ்து செய்தியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.[20] பாப்டிஸ்ட் ஆர்தர் ஈ. கார்சனின் பணியின் காரணமாக, அவர்களின் முயற்சிகள் வெற்றியடைந்தது. இன்று பெரும்பான்மையான சின் மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். சின் மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதை பர்மாவின் பிற பகுதிகள் பின்பற்றவில்லை. சுதந்திரம் பெற்றதில் இருந்து, இராணுவ அரசாங்கம் மத அடிப்படையில் சின் மக்களை துன்புறுத்துகிறது.[21] In their oppression of the Chin people, the Tatmadaw consistently violate the rule of law.[22]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 https://censusindia.gov.in/2011Census/Language-2011/Statement-1.pdf
- ↑ "C-16 Population By Mother Tongue - Manipur". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
- ↑ Munjal, Diksha (March 2, 2022). "The history of the Kuki insurgency in Manipur" – via www.thehindu.com.
- ↑ "Kuki | people | Britannica". www.britannica.com.
- ↑ "C-16 Population By Mother Tongue - Mizoram". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
- ↑ http://censusindia.gov.in/2011census/population_enumeration.html
- ↑ "Chin Tribe - Asian Tour Myanmar". www.asiantour-myanmar.com.
- ↑ Head, Jonathan, Burma's 'abused Chin need help', BBC News, Jan 28, 2009, accessed Jan 28, 2009
- ↑ Upper Chindwin District vol A. Burma Gazetteer. p. 22.
- ↑ "Chin Cultural Profile — EthnoMed". Ethnomed.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-17.
- ↑ "› article". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-06-30.
- ↑ Ethnologue report for Kuki-Chin. Retrieved 2009-12-07.
- ↑ "UNPO: Celebration Of 65th Chin National Day". unpo.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-03.
- ↑ "Chin Bamboo Dance". Myanmar insider.
- ↑ "Chin Bamboo Dance". Myanmar insider.
- ↑ "BUNGKUNG BLOG: Khuang Cawi ( Lifting of decorative Bamboo Litter)". September 19, 2016.
- ↑ "Celebrate Chin National Day on Feb. 17 – Rotary Club of Indianapolis".
- ↑ "Wrestling with culture: Melbourne's Chin community celebrates Chin National Day". SBS (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
- ↑ Peacock, Andrew. "The Chin". Clover Sites.
- ↑ "Chin Christians Persecuted". Radio Free Asia.
- ↑ "Persecution Continues: Political Reform in Myanmar May Not Be The Progress We Think It Is". 10 January 2014.
- ↑ "We Are Like Forgotten People" The Chin People of Burma: Unsafe in Burma, Unprotected in India, page 25.
வெளி இணைப்ப்புகள்
தொகு- பொதுவகத்தில் சின் மக்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Chin Cultural Profile
- Chin Bible பரணிடப்பட்டது 2019-05-03 at the வந்தவழி இயந்திரம்
- Zomi Re-unification Organisation
- iChin National Front
- Tongdot English - Zomi/Chin Online dictionary
- English - Zomi/Chin Online dictionary
- Human Rights Watch Report on Persecution of Chins
- Report on Chin People Seeking Refuge in Mizoram பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம்