சின் அரசமரபு (1115–1234)

சின் வம்சம் (கி.பி. 1115-1234) மங்கோலியத் தாக்குதலுக்கு முன்னர் சீனாவில் இருந்த பல வம்சங்களில் ஒன்றாகும். இது கின் அல்லது சுரசன் சின் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் தோற்றுவிப்பாளர் பேரரசர் தைசு (கி.பி. 1115-1123) வன்யன் சுரசன்களின் வழிவந்தவர் ஆவார். 

பெரிய சின்
大金
கி.பி. 1115–கி.பி. 1234
சின் வம்சம் (நீலம்) கி.பி. 1141 வாக்கில்
சின் வம்சம் (நீலம்) கி.பி. 1141 வாக்கில்
சின்னைச் சுற்றியிருந்தவர்கள்
சின்னைச் சுற்றியிருந்தவர்கள்
நிலைபேரரசு
தலைநகரம்ஹுயினிங் எல்லை

(கி.பி. 1122–1153)
சோங்டு
(கி.பி. 1153–1214)
கைபெங்
(கி.பி. 1214–1233)
கைசோவு

(கி.பி. 1233–1234)
பேசப்படும் மொழிகள்மத்திய சீனம், சுரசன், கிதான்
சமயம்
பௌத்தம்,

தாவோயிசம்,
கன்பூசியனிசம்,

சீன நாட்டுப்புற மதங்கள்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• கி.பி. 1115–1123
தைசு (முதல்)
• கி.பி. 1234
மோ (கடைசி)
வரலாறு 
• அகுடாவால் தோற்றுவிக்கப்பட்டது
28 சனவரி கி.பி. 1115
• லியாவோ வம்சத்தின் அழிவு
கி.பி. 1125
• வடக்கு சாங் வம்சத்திடம் இருந்து பியான்லியாங் கைப்பற்றப்பட்டது
9 சனவரி 1127 கி.பி.
• மங்கோலியப் படையெடுப்பு
கி.பி. 1211
• மங்கோலியப் பேரரசிடம் கைசோவின் வீழ்ச்சி
9 பெப்ரவரி கி.பி. 1234
பரப்பு
கி.பி. 1126 மதிப்பீடு[1]2,300,000 km2 (890,000 sq mi)
கி.பி. 1142 மதிப்பீடு3,000,000 km2 (1,200,000 sq mi)
மக்கள் தொகை
• 
50,000,000
நாணயம்சீன நாணயம், சீனப் பணம்
முந்தையது
பின்னையது
லியாவோ வம்சம்
வடக்கு சாங்
மங்கோலியப் பேரரசு
தெற்கத்திய சாங்
காரா கிதை
கிழக்கத்திய சியா
தற்போதைய பகுதிகள்சீனா, உருசியா, வட கொரியா, மங்கோலியா
சின் அரசமரபு
Chinese name
சீன மொழி 金朝
Alternative Chinese name
சீன மொழி 大金
Literal meaningGreat Jin
Khitan பெயர்
KhitanNik, Niku

சின்கள் லியாவோ வம்சத்திற்கு (கி.பி. 907-1125) எதிரான தைசுவின் புரட்சியில் இருந்து உருவாயினர். லியாவோ வம்சத்தினர் வட சீனாவை ஆண்டு கொண்டிருந்தபோது வளர்ந்து வந்த சின்களிடம் தோற்றனர். லியாவோ வம்சத்தவர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து மேற்கத்திய லியாவோ என்று அழைக்கப்பட்டனர். லியாவோவைத் தோற்கடித்த பின்னர் சின்கள் தெற்கு சீனாவில் இருந்த சாங் வம்சத்திற்கு (கி.பி. 960-1279) எதிராக 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஒரு போரைத் தொடங்கினர். ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர் சின்கள் சீனப் பழக்கவழக்கங்களை சீக்கிரமே கற்கத்தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக வளர்ந்து வந்த மங்கோலியர்களுக்கு எதிராகச் சீனப் பெருஞ்சுவரையும் செறிவூட்டினர். சின் ஆட்சியில் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டன. உதாரணமாக வெடிமருந்து உருவாக்கம் மற்றும் கன்பூசிய மதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

செங்கிஸ் கான் கி.பி. 1211ல் சின் வம்சத்தவருக்கு எதிராகப் படையெடுத்தார். சின் இராணுவத்திற்குப் பேரழிவுகரமான தோல்விகளைக் கொடுத்தார். 

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 219–229. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X இம் மூலத்தில் இருந்து 22 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070222011511/http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf. பார்த்த நாள்: 12 August 2010. 

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_அரசமரபு_(1115–1234)&oldid=3453599" இலிருந்து மீள்விக்கப்பட்டது