சிபில்லா அலராமோ
சிபில்லா அலெராமோ ( Sibilla Aleramo ) (பிறப்பு மார்தா பெலிசினா பேசியோ ( Marta Felicina Faccio ) ; 14 ஆகஸ்ட் 1876 - 13 ஜனவரி 1960) ஒரு இத்தாலிய பெண்ணிய எழுத்தாளரும், கவிஞரும் ஆவார், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியில் ஒரு பெண்ணாக வாழ்க்கையின் சுயசரிதை சித்தரிப்புகளுக்கு மிகவும் பிரபலமானவர்.
சிபில்லா அலராமோ | |
---|---|
1913இல் சிபில்லா அலராமோ | |
பிறப்பு | மார்தா பெலிசினா பேசியோ ஆகஸ்ட் 14, 1876 அலெசாந்திரியா, இத்தாலி இராச்சியம் |
இறப்பு | 13 ஜனவரி 1960 உரோம், இத்தாலி |
தொழில் | எழுத்தாளர், பெண்ணியவாதி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | வியாரெக்கியோ பரிசு |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஅலெராமோ மார்தா பெலிசினா பேசியோ (என்கிற "ரீனா") அலெசாந்திரியா, பியத்மாந்து மற்றும் மிலனில் வளர்ந்தார். 11 வயதில், தனது குடும்பத்துடன் சிவிடனோவா மார்ச்சேக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவரது தந்தை கண்ணாடி தொழிற்சாலையின் மேலாளராக நியமிக்கப்பட்டார். ஆரம்பப் பள்ளிக்கு அப்பால் தனது கல்வியைத் தொடர முடியாத நிலையில், அலெராமோ தனது முன்னாள் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டு, சொந்தமாகப் படிப்பைத் தொடர்ந்தார். தனது தந்தை பணிபுரிந்த அதே தொழிற்சாலையில் இவரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 15 வயதாக இருந்தபோது, பத்து வயது மூத்த சக ஊழியரான உல்டெரிகோ பியராஞ்செலி என்பவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த நிகழ்வைப் பற்றி ரீனா தனது பெற்றோரிடம் கூறவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதில், இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. [1]
பின்னர், 1901 இல் அலராமோ தனது 6 வயது மகனை விட்டுவிட்டு உரோம் சென்றார். இளம் கலைஞரான பெலிஸ் டாமியானியுடன் சிலகால உறவுக்குப் பிறகு, இவர் சில வருடங்கள் ஜியோவானி செனா என்ற எழுத்தாளருடன் ஒன்றாக வாழ்ந்தார். தனது வாழ்க்கைக் கதையை கற்பனையான நினைவுக் குறிப்பாக மாற்ற ஊக்குவித்தார் ( சிபில்லா அலெராமோ என்ற புனைப்பெயருடன் ) . 1906 ஆம் ஆண்டில், இவரது முதல் புதினமான உனா டோனா (ஒரு பெண்), ஒரு பெண் தனது மிருகத்தனமான கணவனை விட்டு வெளியேறும் முடிவைப் பற்றியதாக இருந்தது. இவர் அரசியல் மற்றும் கலை வட்டங்களில் தீவிரமாக இருந்தார். மேலும் உரோமைச் சுற்றியுள்ள வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமப்புறமான அக்ரோ ரோமானோவில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டார்.
1908 ஆம் ஆண்டில், லினா பொலெட்டியை வாக்குரிமை மாநாட்டில் சந்தித்தார். இரண்டு பெண்களும் சேர்ந்து வாழத் தொடங்கினர். [2] [3]
இறப்பு
தொகுஅலராமோ தனது 83வது வயதில் ரோமில் காலமானார்.
குறிப்புகள்
தொகு- ↑ Drake, Richard. (Apr. – Jun. 1990). Sibilla Aleramo and the Peasants of the Agro Romano: A Writer's Dilemma. Journal of the History of Ideas, 51(2):255–272
- ↑ Laura Scuriatti (July 2017). "Transnational Modernist Encounters in the Provinces: Lacerba, Mina Loy and International Debates on Sexual Morality in Florence". Forum for Modern Language Studies 53 (3): 303–313. doi:10.1093/fmls/cqx014. https://doi.org/10.1093/fmls/cqx014.
- ↑ Eugenia Paulicelli (2002). "Fashion, the Politics of Style and National Identity in Pre-Fascist and Fascist Italy". Gender & History 14 (3): 552. doi:10.1111/1468-0424.00281. https://doi.org/10.1111/1468-0424.00281.
உசாத்துணை
தொகு- Aldrich, Robert and Garry Wotherspoon. Who's Who in Gay and Lesbian History, from Antiquity to World War II. Routledge, London, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-25369-7
- Grimaldi Morosoff, Anna. Transfigurations: The Autobiographical Novels of Sibilla Aleramo (Writing About Women). Peter Lang, Bern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-820-43351-6
வெளி இணைப்புகள்
தொகு- [1] via Italian Women Writers database
- Sibilla Aleramo
- குட்டன்பேர்க் திட்டத்தில் Sibilla Aleramo இன் படைப்புகள்
- ஆக்கங்கள் சிபில்லா அலராமோ இணைய ஆவணகத்தில்