லினா பொலெட்டி

இத்தாலிய எழுத்தாளர்

கோர்டுலா "லினா" பொலெட்டி ( Cordula "Lina" Poletti) (27 ஆகஸ்ட் 1885 - 12 டிசம்பர் 1971) இத்தாலிய எழுத்தாளரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், பெண்ணியவாதியும் ஆவார் . பெரும்பாலும் அழகான மற்றும் கலகக்காரின் என்று வர்ணிக்கப்படுகிறார். ஆண்களின் ஆடைகளை அணிவதில் விருப்பமுள்ள இவர், இத்தாலியில் தனது நேர்பாலீர்ப்பு பெண் என வெளிப்படையாக அறிவித்த முதல் பெண்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

லினா பொலெட்டி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கோர்டுலா பொலெட்டி 27 ஆகஸ்ட் 1885 அன்று ராவென்னாவில் ரோசினா டொனாட்டி மற்றும் பிரான்செஸ்கோ ஆகியோருக்கு நான்கு மகள்களில் மூன்றாவதாக பிறந்தார். [1] இவரது குடும்பம் நன்கு வசதியாக இருந்தது. இவர் போலோக்னா பல்கலைக்கழகத்தில் இத்தாலியின் கவிஞரும் அறிஞருமான ஜியோவானி பாஸ்கோலியுடன் படித்தார். 1907 இல் ஜியோசுவே கார்டுச்சியின் கவிதைகளை ஆய்வு செய்த ஆய்வறிக்கையுடன் தனது கல்வியை முடித்தார். [2] [3]

தொழில் மற்றும் செயல்பாடு

தொகு

1908 ஆம் ஆண்டில், உரோமில் நடந்த முதல் தேசிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். [2] இந்த மாநாடு இத்தாலியில் பெண்கள் இயக்கத்தில் மனிதாபிமான நலத் திட்டங்களில் கவனம் செலுத்துவதில் இருந்து பெண்களின் வாக்குரிமைக்கான அர்ப்பணிப்பு மற்றும் பெண்களின் சட்ட மற்றும் குடிமை உரிமைகளை முழுமையாக அங்கீகரிப்பதற்கான மாற்றத்தைக் குறித்தது. அதில் இவர் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் சிபில்லா அலராமோவைச் சந்தித்தார். அவர் இத்தாலிய சமுதாயத்தில் பெண்களின் கீழ்நிலை நிலையை அகற்றும் சமூக மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டார். மாநாட்டைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் கிராமப்புற விவசாயிகளுக்கு கல்வி வழங்குவதற்கான முயற்சியிலும், டிசம்பர் 1908 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கலாப்ரியா மற்றும் சிசிலியில் நிவாரண முயற்சிகளிலும் ஈடுபட்டனர். [1]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு
  • 1918: Il poema della Guerra.[1]
  • 1919: Il cipressetto della rocca a Santarcangelo di Romagna.[1]
  • 1921: La fabbrica dei mobili Rasponi a Santarcangelo di Romagna
  • 1934: Il XXXIII Canto del Paradiso letto nella sala di Dante in Ravenna.[1]
  • 1934: Stazio nella Divina Commedia.[1]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லினா_பொலெட்டி&oldid=3664849" இலிருந்து மீள்விக்கப்பட்டது