சிபி புவன சந்திரன்

தமிழ் நடிகர்

சிபி புவன சந்திரன் (Ciby Bhuvana Chandran, பிறப்பு 5 ஆகத்து 1991), எளிமையாக சிபி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். வஞ்சகர் உலகம் (2018) படத்தில் நாயகனாக நடிப்பதற்கு முன்பு இவர் ஓ காதல் கண்மணி (2015) படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ்டர் (2021) படத்தில் துணை வேடத்தில் நடித்தார். 2022 இல் வெளிவரவிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சிபி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் உண்மை நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 5இல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சிபி புவன சந்திரன்
பிறப்பு5 ஆகத்து 1991 (1991-08-05) (அகவை 33)
தென்காசி[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2018 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுலோகா

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சிபி தென்காசியில் பிறந்து பின்னர் தமிழ்நாட்டின் சேலத்திற்கு குடிபெயர்ந்தார். இதன் பிறகு இவர் சென்னைக்கு சென்றார். இவரது தந்தை ஒரு மருத்துவர். கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களில் நடித்தார். இவர் ஐக்கிய இராச்சித்தில் இருந்து திரும்பிய பிறகு சந்தித்த சுலோகா என்பவரை நவம்பர் 14 அன்று திருமணம் செய்துகொண்டார்

தொழில்

தொகு

திரைப்படம்

தொகு

சிபியின் முதல் படம் ஓ காதல் கண்மணி, அதில் இவர் துல்கர் சல்மானின் நண்பராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் இவர் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக நடித்தத பாத்திரமானது இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இது இவருக்கு ஓரளவு புகழைப் பெற்றுத் தந்தது. இதன் பிறகு 2021 இல் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் மற்றொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்தில் இவர் விஜயுடன் இணைந்து நடித்தார். அதில் இவர் அவரது மாணவராக நடித்தார், மேலும் " வாத்தி கம்மிங் " பாடலிலும் தோன்றினார்.

இவரது அடுத்த படம் சூரியா மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் எதற்கும் துணிந்தவன் ஆகும்.

தொலைக்காட்சி

தொகு

தமிழ் தொலைக்காட்சி உண்மைநிலை நிகழ்சியான பிக் பாஸ் தமிழ் 5 இல் சிபி கலந்துகொண்டார்.[2] 12 லட்சம் ரொக்கப் பரிசுடன் 95வது நாள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். .[3]

பிக் பாசிலிருந்து இவர் வெளியேறிய பிறகு, இவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெகுசன இரசிகர்கள் நிறையபேர் பின்தொடர்ந்தனர். அதில் இவர் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 46,000 பின்தொடரபவர்களைப் பெற்றார். பிக் பாசில் இவரது நேர்மை, உண்மைத் தன்மை, ஆளுமை, கருணை, அமைதியான நகைச்சுவை, மற்ற போட்டியாளர்களிடம் அவர் காட்டும் மரியாதை ஆகியவற்றால் இவரை வெகுசன ரசிகர்களை பின்தொடர வைத்தது. இவர் பிக்பாஸ் வீட்டில் "சிபிலா" என்றும் "மேரீட் பேச்சுலர்" என்றும் அழைக்கப்பட்டார்.

திரைப்படவியல்

தொகு

திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2015 ஓ காதல் கண்மணி ஆதித்யாவின் சக பணியாளர் தமிழ் அங்கீகரிக்கப்படாத பாத்திரம்
2018 வஞ்சகர் உலகம் சண்முகம் / சியாம் முன்னணி பாத்திரதில் அறிமுகம்
2021 குரு ஸ்ரீ
2022 எதற்கும் துணிந்தவன் அறிவிக்கப்படும்

குறும்படம்

தொகு
ஆண்டு குறும்படம் பாத்திரம் மொழி தயாரிப்பகம் சக நடிகர்கள், நடிகை இயக்குநர் குறிப்புகள் நீளம் குறிப்பு.
2014 எஸ்.பி. பிரியாணி இளைஞன் தமிழ் ஏ7 ஸ்டுடியோஸ் இளம் பெண்ணாக சுருதி விநாயக் அறிமுக குறும்படம் 14:44 [4]
2015 29 - காதல் கதை வருண் சர்மா தமிழ் சாட்கட் தீபாவளி பைத்யாவாக பிரியாவாக எஸ். பாலச்சந்தர் 21:15 [5]

இசைக் காணொலிகளில்

தொகு
ஆண்டு பாடல் தயாரிப்பகம் மொழி இசையமைப்பாளர் நீளம் குறிப்பு மேற்கோள்.
2014 ஃபீல் மை லவ் (அதிகாரப்பூர்வ தமிழ் இசைக் கானொலி) வி.ஆர்.எஸ் மியூசிக் புரொடக்சன்ஸ் தமிழ் விஜய் ராஜ செல்வன் 3:07 அறிமுக காணொலி பாடல் [6]
2015 மெலடி ஆஃப் லவ் (அதிகாரப்பூர்வ தமிழ் இசை காணொலி) 3:14 [7]
2017 ஹார்ட் டு ஹார்ட் (அதிகாரப்பூர்வ தமிழ் இசை காணொலி) 4:01 [8]

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு நிகழ்ச்சி பங்கு அலைவரிசை குறிப்புகள்
2021-22 பிக் பாஸ் தமிழ் 5 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி 12 லட்சம் ரொக்கப் பரிசுடன் 95வது நாளில் வெளியேறினார் [9]

குறிப்புகள்

தொகு
  1. Parthiban, A. "பிக் பாஸ் சிபி-யின் கதை: சில்லுனு ஒரு காதல் சூர்யா கதை மாதிரி இருக்கே [The story of Big Boss Ciby: story is like Silinu Oru Kaadhal Suriya]". Times of India Samyam.
  2. "Bigg Boss 5 contestant Cibi Chandran garners attention among the lot!". www.indiaglitz.com (in ஆங்கிலம்). 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.
  3. "On Bigg Boss Tamil, 'Master' Fame Ciby Chandran Looks to Capitalise on his Popularity". www.news18.com (in ஆங்கிலம்). 8 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
  4. SPL Biryani - Tamil Short Film with ENGLISH Subtitles (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-31
  5. 29 - Love Story - New Tamil Short Film || with Subtitles (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-31
  6. Feel My Love (Official Music Video Tamil) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-31
  7. Melody Of Love | Official Tamil Music Video | Vijay Raja Selvan | Ciby | Sana | HD 1080P (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-31
  8. Heart to Heart | Official Tamil Music Video | Vijay Raja Selvan | Ciby | Sana Shalini | 4K (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-31
  9. "Ciby reveals why he accepted the special cash offer to walk out of Bigg Boss!". www.indiaglitz.com (in ஆங்கிலம்). 6 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபி_புவன_சந்திரன்&oldid=4169516" இலிருந்து மீள்விக்கப்பட்டது