சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை
சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை (ஆங்கிலம்: Sepang International Circuit; அல்லது Petronas Sepang International Circuit; மலாய்: Litar Antarabangsa Sepang) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள பன்னாட்டு சுற்றுகை ஆகும்.
அமைவிடம் | சிப்பாங், சிலாங்கூர், மலேசியா |
---|---|
Coordinates | 2°45′38″N 101°44′15″E / 2.76056°N 101.73750°E |
Capacity | 130,000 |
Opened | 7 மார்ச்சு 1999 |
Former names | சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை (Sepang International Circuit) (மார்ச் 1999 – அக்டோபர் 2023) |
முதன்மை போட்டிகள் | தற்போது: விசையுந்து கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் மலேசிய விசையுந்து கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் (1999–2019, 2022–தற்போது) ஆசிய லீ மான்ஸ் தொடர் (2013–2020, 2023–தற்போது) ஜிடி ஆசிய உலகப் பந்தயம் (2017–2019, 2022–தற்போது) TCR ஆசியத் தொடர் (2015–2019, 2024) சிப்பாங் 12 மணி நேரம் (2000–2016, 2023–தற்போது) ஆசிய சாலை பந்தய போட்டி வாகை (2003–2015, 2019–2020, 2022–தற்போது) எதிர்காலத்தில்: சுப்பர் GT (2002, 2004–2013, 2025) முன்னாள்: பார்முலா 1 மலேசிய போட்டி வாகை |
கிராண்ட் பிரிக்ஸ் சுற்றுகை (1999 – தற்போது) | |
நீளம் | 5.543 km (3.445 mi) |
திருப்பங்கள் | 15 |
சுற்று நேரச்சாதனை | 1:34.080 ( செபஸ்டியன் வெத்தேல், {{{Record_team}}}, 2017 மலேசிய கிராண்ட் பிரிக்ஸ், பார்முலா 1) |
வடக்கு சுற்றுகை (1999 – தற்போது) | |
Length | 2.706 km (1.681 mi) |
Turns | 9 |
தெற்கு சுற்றுகை (1999 – தற்போது) | |
Length | 2.609 km (1.621 mi) |
Turns | 8 |
இந்தச் சுற்றுகை கோலாலம்பூருக்கு தெற்கே ஏறக்குறைய 45-கிலோமீட்டர் (28 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகாமையிலும் அமைந்துள்ளது.[1]
பொது
தொகு1999-ஆம் ஆண்டில் இருந்து 2017-ஆம் ஆண்டு வரையில் பார்முலா 1 (Formula One) மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை (Malaysian Grand Prix) நடத்தியது.
மலேசிய விசையுந்து கிராண்ட் பிரிக்ஸ் (Malaysian Motorcycle Grand Prix), மலேசியா மெர்டேகா தாங்குதிறன் போட்டி (Malaysia Merdeka Endurance Race); மற்றும் பிற முக்கிய விசையுந்து நிகழ்வுகளுக்கான இடமாகவும் செயல்பட்டு உள்ளது.
வரலாறு
தொகுமுன்பு சிப்பாங் எப் 1 சுற்றுகை (Sepang F1 Circuit) என்று அழைக்கப்பட்டது; பின்னர் 31 அக்டோபர் 2023 அன்று, சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை என மறுபெயரிடப்பட்டது. இந்தச் சுற்றுகை ஜெர்மன் வடிவமைப்பாளர் எர்மன் தில்கே என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
1990-களில் பிரதமர் மகாதீர் முகமது அரசாங்கத்தின் கீழ், புத்ராஜெயாவிற்கு அருகில், 1997 - 1999-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை கட்டப்பட்டது. 1999-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவின் 4-ஆவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் இந்தச் சுற்றுகை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[2]
தளவமைப்பு
தொகுஇந்தச் சுற்றுகையின் முதன்மைச் சுற்று, பொதுவாக கடிகார திசையில் ஓடுகிறது. இந்தச் சுற்றுகை 5.543 கிமீ (3.444 மைல்) நீளம் கொண்டது.[3]
மேலும் காண்க
தொகுகாட்சியகம்
தொகுசுற்றுகை கட்டமைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Petronas acquires naming rights for Sepang Circuit". Malay Mail. https://www.malaymail.com/news/sports/2023/10/31/petronas-acquires-naming-rights-for-sepang-circuit/99442.
- ↑ "Sepang International Circuit - Our Story". பார்க்கப்பட்ட நாள் 8 January 2013.
- ↑ "Take a trip around the world's toughest F1 circuit with our composite race track". Red Bull (in ஆங்கிலம்). 4 June 2018. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.