மலேசிய கூட்டரசு சாலை 26
மலேசிய கூட்டரசு சாலை 26 அல்லது கேஎல்ஐஏ விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 26; அல்லது KLIA Expressway; மலாய்: Laluan Persekutuan Malaysia 26 அல்லது Lebuhraya KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும்.[1]
மலேசிய கூட்டரசு சாலை 26 விரைவுச்சாலை 6 Malaysia Federal Route 26 Expressway 6 Laluan Persekutuan Malaysia 26 | |
---|---|
கேஎல்ஐஏ விரைவுச்சாலை KLIA Expressway Lebuhraya KLIA | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் மலேசிய பொதுப்பணித் துறை | |
நீளம்: | 11.0 km (6.8 mi) |
பயன்பாட்டு காலம்: | 1995 – |
வரலாறு: | கட்டுமானம் 1997 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | கேஎல்ஐஏ மாற்றுவழி |
கேஎல்ஐஏ வெளிவட்டச் சாலை | |
தெற்கு முடிவு: | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பந்திங்; நீலாய் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்; சிப்பாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்தக் கூட்டரசு சாலை கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Lumpur International Airport) (KLIA); மற்றும் அதன் அருகிலுள்ள சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை (Sepang International Circuit); மற்றும் பண்டார் என்ஸ்டெக் (Bandar Enstek) ஆகியவற்றிற்கான முக்கிய அணுகல் சாலையாகவும் செயல்படுகிறது.[2]
பொது
தொகுகேஎல்ஐஏ விரைவுச்சாலை 11.0 கிமீ (6.8 மைல்) நீளம் கொண்டது; மற்றும் பிளஸ் விரைவுச்சாலைகள்; மலேசிய பொதுப்பணித் துறை ஆகிய அமைப்புகளினால் பராமரிக்கப்பபடுகிறது.
கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் கிலோமீட்டர் A0 (Kilometre Zero) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் மாற்றுவழியில் தொடங்குகிறது.[3]
மலேசிய பொதுப்பணித் துறை
தொகுகேஎல்ஐஏ விரைவுச்சாலையின் முதல் 5.9 கிமீ (3.7 மைல்) சாலை; வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பின் ஒரு பகுதியாக பிளஸ் விரைவுச்சாலைகள் மூலம் பராமரிக்கப்படுகிறது.
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கும் கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் மீதமுள்ள பகுதிகள் மலேசிய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது.[4]
மலேசிய கூட்டரசு சாலை 26-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
சிறப்புக் கூறுகள்
தொகு- 6 வழிப் பாதைகள்
- பிளஸ் (PLUS) பிரிவில் 110 கி.மீ. வேக வரம்பு
- விளமபரத் தூண்கள்
- அவசர தொலைபேசிகள்
- இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பல விளம்பர பலகைகள்
- வானூர்தி நிலைய எல்லையில் இருந்து வானூர்தி நிலைய முதன்மைக் கட்டிடம் வரையில் 8 வழிப்பாதைகள்
விளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ 3.0 3.1 "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.