சிமா சமர்
சிமா சமர் (Sima Samar ; பிறப்பு 3 பிப்ரவரி 1957) ஆப்கானித்தானைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரும், ஆர்வலரும் , தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களுக்குள் ஒரு சமூக சேவகரும் ஆவா. இவர் திசம்பர் 2001 முதல் 2003 வரை ஆப்கானித்தானின் மகளிர் விவகார அமைச்சராக பணியாற்றினார். இவர் தற்போது ஆப்கானித்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும், 2005 முதல் 2009 வரை, சூடானில் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளராகவும் உள்ளார்.[1] 2011 இல், இவர் புதிதாக நிறுவப்பட்ட உண்மை மற்றும் நீதி கட்சியின் ஒரு பகுதியாக இருந்தார். 2012 ஆம் ஆண்டில், "மனித உரிமைகள், குறிப்பாக பெண்களின் உரிமைகள், உலகின் மிக சிக்கலான மற்றும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றான இவரது நீண்டகால மற்றும் தைரியமான அர்ப்பணிப்புக்காக ரைட் லவ்லிவுட் விருது வழங்கப்பட்டது.
சிமா சமர் | |
---|---|
سیما سمر | |
தாய்மொழியில் பெயர் | سیما سمر |
பிறப்பு | 3 பெப்ரவரி 1957 சாகோரி மாவட்டம், கசுனி மாகாணம், ஆப்கானித்தான் |
தேசியம் | கசாரா இனம் |
பட்டம் | மகளிர் விவகாரத் துறை அமைச்சர் |
முன்னிருந்தவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | அபீபா சராபி |
அரசியல் கட்சி | உண்மை மற்றும் நீதிக் கட்சி |
விருதுகள் | ரைட் லவ்லிவுட் விருது |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசிமா சமர், 3 பிப்ரவரி 1957 அன்று ஆப்கானித்தானின் கசுனி மாகாணத்தில் சாகோரி மாவட்டத்தில் பிறந்தார். இவர் கசாரா இனத்தைச் சேர்ந்தவர். பிப்ரவரி 1982இல் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னார் காபூலில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவம் பயின்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய சொந்த மாவட்டமான சாகோரிக்கு தனது பாதுகாப்பிற்காக ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு இவர் மத்திய ஆப்கானித்தானின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். தற்போது ஆப்கானித்தானில் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
தொழில்
தொகு1984ஆம் ஆண்டில், ஆப்கானித்தான் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கம் இவரது கணவரை கைது செய்தது. சமர் தனது இளம்வயது மகனுடன் அண்டை நாடான பாக்கித்தானுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் பாக்கித்தான் மிஷன் மருத்துவமனையின் அகதி கிளையில் மருத்துவராக பணிபுரிந்தார். ஆப்கானித்தான் அகதிப் பெண்களுக்கான மொத்த சுகாதார வசதிகள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளான இவர், 1989ஆம் ஆண்டு பாக்கித்தானின் குவெட்டாவில் சுஹதா அமைப்புயும் சுஹதா மருத்துவமனையையும் நிறுவினார். சுஹதா அமைப்பு ஆப்கானித்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பராமரிப்பு வழங்குதல், மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுகளில் மருத்துவமனையின் மேலும் பல கிளைகள் ஆப்கானித்தான் முழுவதும் திறக்கப்பட்டது.
அமைச்சர்
தொகுஒரு தசாப்தத்திற்கும் மேலாக அகதியாக வாழ்ந்த பிறகு, சமர் 2002இல் ஆப்கானித்தானுக்கு திரும்பினார். ஹமித் கர்சாய் தலைமையிலான ஆப்கானித்தான் இடைக்கால நிர்வாகத்தில் அமைச்சரவை பதவியை ஏற்றுக்கொண்டார். இடைக்கால அரசாங்கத்தில், இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் பின்னர் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். கனடாவில் ஒரு பாரசீக மொழி செய்தித்தாளுக்கு அளித்த நேர்காணலின் போது பழமைவாத இசுலாமிய சட்டங்கள், குறிப்பாக இசுலாமியச் சட்டத்தை கேள்வி கேட்டதற்காக இவருக்கு மரண அச்சுறுத்தலும் துன்புறுத்தலுக்கும் ஆளானதால் இவர் தனது பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2003 லோயா ஜிர்கா மாநாட்டின் போது, பல மத பழமைவாதிகள் ஆப்கானித்தானின் சல்மான் ருஷ்டி என்று இவரை உள்ளூர் செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டனர்.
பிற பதவிகள்
தொகுசமர், தற்போது ஆப்கானித்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார். 2010ஆம் ஆண்டில் கௌர்ஷாத் உயர்கல்வி நிறுவனத்தையும் இவர் நிறுவினார். இது 1200க்கும் மேற்பட்ட மாணவர்களை அதன் மிகக் குறைந்த செலவினால் ஈர்த்தது.[2] 2019ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு, பெடெரிகா மொகெரினி மற்றும் டொனால்ட் கபெருகா தலைமையில் உள் இடப்பெயர்ச்சி குறித்த உயர்மட்டக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் ஒருவராக இவரை நியமித்தார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Independent Expert on the situation of human rights in the Sudan". Office of the High Commissioner. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
- ↑ Gawharshad Institute of Higher Education#Board of trustees
- ↑ High-Level Panel on Internal Displacement ஐக்கிய நாடுகள் அவை, press release of December 3, 2019.
வெளி இணைப்புகள்
தொகு- Ms. magazine "A Voice for the Voiceless" பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம் Winter 2007 conversation with Sima Samar and Ms. executive editor Katherine Spillar.
- The New England Journal of Medicine "Despite the Odds -- Providing Health Care to Afghan Women" Vol. 351, No. 11 (2004).
Other Afghan Human Rights Activists