சிம்மாச்சலம்
வராக லட்சுமி நரசிம்மா் கோயில் (Sri Varaha Lakshmi Narasimha temple) என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் மாநிலமான ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
சிம்மாச்சலக் கோயில் சிம்மாத்திரி Simhachalam Temple సింహాచలం దేవాలయము | |
---|---|
சிம்மாச்சலம் | |
ஆள்கூறுகள்: | 17°46′48″N 83°12′50″E / 17.77987°N 83.213925°E |
அமைவிடம் | |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
அமைவு: | விசாகப்பட்டினம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நரசிம்மர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கலிங்கர் கட்டிடக்கலை, தென்னிந்தியா |
இணையதளம்: | http://www.simhachalam.com/ |
புராணக் கதை
தொகுதிருமால் வசித்த வைகுண்டத்தின் வாசலை இருவர் காத்து வந்தனர். அவர்களுக்கு துவாரபாலகர்கள் என்று பெயர். திருமாலை வணங்கும்பொருட்டு அங்கு வந்த முனிவர்களை இருவரும் தடுத்து துன்புரித்தினர்.இதை அறிந்த விஷ்ணு பகவான் அவர்களுக்கு சாபமிடளானார்.முதலாவது வாயிற்காப்போன், இரணியகசிபு என்னும் அரக்கனாகப் பிறந்தான். இன்னொரு வாயிற்காப்போன், அவனின் தம்பியாகப் பிறந்து, இரணியாட்சன் என்ற பெயரைப் பெற்றான்.இரண்யகசிபு தன்னுடைய தவ வலிமையால் தேவர்களை வென்று தானே கடவுள் என அனைவரைவுயும் வணங்க சொன்னான்.இரண்யகசிபுவின் மகனாகப் பிரகலாதன் பிறந்தான்,இரண்யகசிபு கஸ்ட காலங்களில் நாரதர் பல உதவிகள் செய்தால் நாரதர் வளர்ப்பில் பிரகலாதன் வளர்ந்தான். நாரத மாமுனியாள் பிரகலாதன் விஷ்ணு பக்தன் ஆனான். தன் நாட்டில் உள்ளோர் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என இரண்யகசிபு உத்தரவிட்டான். அதை அவன் மகன் ஏற்காமல் விஷ்ணுவை வணங்கி வந்தான். பிரகலாதனை பல விதத்தில் துன்புறத்த ஏற்பாடு செய்தும், விஷ்ணுவின் கருணையால் காப்பாற்றப்பட்டான். கோபமடைந்த இரண்யன், ”உன் நாராயணன் எங்கிருக்கிறான்” எனக் கேட்க, ”அவர் தூணிலும் இருப்பார்” என்றான் பிரகலாதன். இரண்யகசிபு ஆவேதத்துடன் தூணை இடிக்க, தூணை பிளந்து விஷ்ணு பகவான் சிங்க தலையுடனும் மனித உடலுடனும் நரசிம்மராக வெளிப்படுகிறார் . இரண்யகசிபுவை தன் மடியில் வைத்து வீட்டு வாசலில் தன்னுடைய கூரிய நகங்களால் இரண்யகசிபுவின் வயிற்றை கிழித்து கொல்கிறார். பிரகலாதனைக் காப்பாற்ற மேலிருந்து குதித்ததால், அவரது கால்கள் மண்ணில் ஆழமாய்ப் பாய்ந்துவிட்டது என்று மக்கள் நம்புகின்றனர்.
இக்கதையினபடி விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.
மஞ்சள் காப்பு
தொகுஇக்கோயிலின் தல புராணத்தின்படி தந்தையின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் அகோரருக்குக் கோயில் கட்டினான். ஆதன்பிறகு, அந்த யுகத்தின் முடிவில் கோயில் கேட்பாரற்று அழியத் தொடங்கி, மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது. அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்து அழிவுற்ற கோயிலை மீண்டும் கட்டினான். அந்தச் சமயத்தில் ஒலித்த அசரிரீயானது அந்த சிலை உருவத்தை காண இயலாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியது. ஆண்டுக்கு ஒரு முறையே அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அது போலவே இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.
கோயில் அமைப்பு
தொகுசோழன் குலோத்துங்கனின் பதினோராம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள் இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. 13 ஆம் நூற்றாண்டு கீழைக் கங்க மன்னர்கள் இந்தக் கோயிலை விரிவாக்கியுள்ளனர். கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பம்சம், அது வராக, நரசிம்ம அவதாரங்களின் அடையாளமாக உள்ளது. கோயிலின் சிற்பங்களும், கட்டிடக் கலையும் ஒரிய பாணியைக் கொண்டதாக உள்ளது.
கருவறைக்கு இடப் பக்கம் கப்பஸ்தம்பம் என்ற தூண். மணிகளாலும் பட்டு துணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவாறு உள்ளது. இதற்குக் கீழே சந்தான கோபாலரின் யந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதைக் கட்டிக்கொள்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கோயிலின் முதன்மை வாயில், கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. கோயில் வளாகத்தின் நடுவே கருவறை உள்ளது. அதற்கு நடுவில் ஒரு சிறிய மேடையில் மூலவர் சந்தனப் பூச்சுடன் கூடிய லிங்கம் போல காட்சித் தருகிறார். வைகாசி மாதம் சந்தன பூச்சு கற்றப்பட்டு அவரின் மெய்யான உருவம் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன், இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருவார். இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். கையில் தாமரையுடன் ஆண்டாள் , லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன.
விழாக்கள்
தொகுகோயில் விழாக்களில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் கல்யாணோற்சவம், சந்தனயாத்திரோட்சவம் ஆகியவை முக்கிய வைபவங்களாகப் பக்தர்களால் போற்றப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து பக்தர்கள் சந்தன யாத்திரையில் கலந்துகொள்கின்றனர். அன்றுதான் சந்தனம் அகற்றப்பட்டு மூலவர் அசல் உருவத்தில் காட்சி தருவார். இது அட்சய திருதியை அன்று நடைபெறும்.[1]
படங்கள்
தொகு-
கோயிலின் பின்புறத்தில் உள்ள சிம்மாசனம்
-
வெளியேறும் வாயில்
-
புதிய மண்டபம்
-
மரத்தாலான தேர்
சான்றுகள்
தொகு- ↑ "சிம்மக் கடவுளின் ஆசனம் - சிம்மாச்சலம்". கட்டுரை. தி இந்து. 24 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2017.