சான் கானரி

கோல்டன் குளோப் விருது பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் (1930–2020)
(சியான் கானரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் தாமஸ் சான் கானரி (Sir Thomas Sean Connery, 25 ஆகத்து 1930 – 31 அக்டோபர் 2020) ) ஸ்கொட்லாந்தில் பிறந்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவர் அகாதமி விருது மற்றும் இரண்டு முறை பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று முறை கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார்.

சர்
சான் கானரி
Sean Connery
2008 இல் கானரி
பிறப்புதாமசு சான் கானரி
(1930-08-25)25 ஆகத்து 1930
பவுண்டன்பிரிட்ச், எடின்பரோ, இசுக்கொட்லாந்து
இறப்பு31 அக்டோபர் 2020(2020-10-31) (அகவை 90)
நேசோ, பகாமாசு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1954–2003, 2012
வாழ்க்கைத்
துணை
  • டயான் சிலென்டோ
    (தி. 1962; ம.மு. 1973)
  • மிசெலின் உரோக்புரூன் (தி. 1975)
பிள்ளைகள்ஜேசன் கானரி
உறவினர்கள்நீல் கானரி (சகோ.)
வலைத்தளம்
seanconnery.com

இவர்தான் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1962 முதல் 1983 வரை ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.[1] தெ அன்டச்சபிள்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் துணைக் கதாப்பத்திரத்திற்கான அகாதமி விருது பெற்றார். டிராகன் ஹார்ட், மரைன், தெ நேம் ஆஃப் தெ ரோஸ், தெ லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மென், இன்டியானா ஜோன்ஸ் அண்டு தெ லாஸ்ட் க்ருசேட், தெ ராக் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

இசுக்கொட்லாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறந்த மனிதர் [2] மற்றும் இசுக்கெட்லாந்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் பொக்கிஷம் [3] ஆகியனவற்றிற்கு நடத்திய வாக்கெடுப்பில் இவர் தேவெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டில் பீப்பிள் எனும் அமெரிக்க இதழ் சிறந்த ஆணழகனாக இவரைத் தேர்வு செய்தது ,மேலும் 1999 இல் நடத்திய வாக்கெடுப்பில் நூற்றாண்டின் சிறந்த ஆணழகனாக இவர் தேர்வானார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தாமஸ் சான் கானரி ஆகத்து 25, 1930 இல் பவுண்டைன்பிரிட்ஜ், எடின்பரோவில் பிறந்தார்.[4] தாமஸ் சான் கானரி எனும் பெயரானது இவரின் தாத்தாவின் பெயரானதாமஸ் என்பதுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவரின் தந்தை ஜோசப் கானரி ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தார் மேலும் சுமையுந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார். இவரின் தாய் யுபேமியா மெக்பைன் எஃபீ ஒரு துப்புரவுத் தொழிலாளி.[5][6] இவரின் மூதாதையர்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் இருந்து இசுக்கொட்லாந்துக்கு இடம்பெயர்ந்தனர். இவரின் தந்தை கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். ஆனால் இவரின் தாய் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர். இவருக்கு நீல் எனும் சகோதரர் உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் வரை தனது பெயரின் மத்தியப் பகுதியான சான் என்றே அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனது இளமைப் பருவத்தில் டாமி என அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆரம்பப பள்ளியில் பயிலும் போது குட்டையாக இருந்ததாகவும் தனது பதினெட்டாம் வயதிலேயே 6 அடி 2 அங்குலம் வளர்ந்துவிட்டத்தாகவும் கூறினார்.

சான் கானர் முதலில் இசுக்கொட்லாந்து, எடின்பரோவில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பால்காரராக வேலை பார்த்தார்.[7] 2009 ஆம் ஆண்டில் ஒரு வாடகையுந்து ஓட்டுநருடன் நடந்த உரையாடலைப் பின்வருமாறு கூறுகிறார்.

எடின்பரோ திரைப்படத் திருவிழாவில் பங்கேற்பதற்காக நான் ஒரு வாடகையுந்தில் சென்றேன். அப்போது நாங்கள் கடந்து சென்ற அனைத்துத் தெருக்களின் பெயர்களையும் நான் கூறுவதைக் கேட்ட ஓட்டுநர் எவ்வாறு உங்களுக்கு இந்தத் தெருக்களின் பெயர்கள் தெரிகிறது? எனக் கேட்டார். அதற்கு நான் இங்கு பால்காரராக வேலை பார்த்துள்ளேன் எனக் கூறினேன். அதற்கு அவர் ,அப்படியானால் தற்போது நீங்கள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்டார். என்னால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை எனத் தெரிவித்தார்.

மறைவு தொகு

சான் கானரி 2020 அக்டோபர் 31 அன்று தனது 90-வது அகவையில் பகாமாசு, நேசோ நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[8][8][9]

சான்றுகள் தொகு

  1. "Profile: Sean Connery". BBC News. 12 March 2006. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4799550.stm. பார்த்த நாள்: 19 March 2007. 
  2. Flockhart, Susan (25 January 2004). "Would The Greatest Living Scot Please Stand Up?; Here they are". Sunday Herald இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160911105554/https://www.highbeam.com/doc/1P2-10001248.html. பார்த்த நாள்: 16 June 2016. 
  3. "Sir Sean Connery named Scotland's greatest living treasure". STV News. 25 November 2011 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402092622/http://news.stv.tv/scotland/282154-sir-sean-connery-named-scotlands-greatest-living-treasure/. பார்த்த நாள்: 6 August 2012. 
  4. CONNERY, Sir Sean. Who's Who. 2015 (online Oxford University Press ). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U11650.  (subscription required)
  5. "Sean Connery Biography". Film Reference. Advameg, Inc. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007.
  6. "Case Study 1-Sean Connery-James Bond". Familyrelatives.com. Treequest Limited. பார்க்கப்பட்ட நாள் 6 August 2012.
  7. "From the Co-op with love.. the days Sir Sean earned £1 a week". The Scotsman. 21 November 2005. Archived from the original on 13 October 2007. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007.
  8. 8.0 8.1 "Sean Connery: James Bond actor dies aged 90" (in en-GB). BBC News. 31 October 2020. https://www.bbc.co.uk/news/entertainment-arts-54761824. 
  9. "Obituary: Sir Sean Connery" (in en-GB). BBC News. 31 October 2020. https://www.bbc.co.uk/news/entertainment-arts-13087132. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_கானரி&oldid=3604337" இலிருந்து மீள்விக்கப்பட்டது