சியாம் சரண் நேகி

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்

சியாம் சரண் நேகி (Shyam Saran Negi ; 1 ஜூலை 1917 - 5 நவம்பர் 2022) இமாச்சலப் பிரதேசத்தின்கல்பாவில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் 1951 பொதுத் தேர்தலில் முதல் வாக்களித்தார்.[2] [3] இத்தேர்தல் 1947 இல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்த நாட்டின் முதல் தேர்தலாகும். தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குப்பதிவு பிப்ரவரி 1952 இல் நடந்தாலும், இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வானிலை மோசமாக இருக்கும் என்ற காரணத்தால் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெற்றது.[4] நேகி வாக்குச் சாவடிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் ஷோந்தோங் வாக்குச் சாவடியில் தனது முதல் வாக்கை அளித்ததையும், பூர்வானி - ரிப்பா - மொராங் - நெசோங் ஆகிய இடங்களில் நீண்ட தூரம் மலையேற வேண்டியிருந்தது என்பதையும் இதற்காக 10 நாட்கள் ஆனதையும் தெளிவாக நினைவு கூர்ந்தார். நேகி 25 அக்டோபர் 1951 அன்று இந்தியாவின் முதல் வாக்கை வாக்களித்தார். 1951 முதல் தான் இறக்கும் வரை ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நேகி வாக்களித்தார். மேலும் இவர் இந்தியாவின் மிகப் பழமையான வாக்காளர் மற்றும் முதல் வாக்காளர் என்றும் நம்பப்படுகிறது.[4] சியாம் சரண் நேகி சனம் ரே என்ற இந்திப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.[5]

சியாம் சரண் நேகி
Shyam Saran Negi
2017 இல் நடந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் நேகி
பிறப்பு(1917-07-01)1 சூலை 1917 [1]
கல்பா, கின்னௌர் மாவட்டம், புசாகர் மாநிலம், பிரித்தானிய இந்தியா
(நவீன இமாச்சலப் பிரதேசம், இந்தியா)
இறப்பு5 நவம்பர் 2022(2022-11-05) (அகவை 105)
கல்பா, கின்னௌர், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்காகம்
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
தேசிய நாடகப் பள்ளி
பணிபள்ளி ஆசிரியர்
அறியப்படுவதுஇந்தியக் குடியரசின் முதல் வாக்காளர்

இறப்பு

தொகு

நேகி தனது 105 வது வயதில், நவம்பர் 5,2022 அன்று, 34 வது முறையாக வாக்களித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார். இவரது மரணச் செய்தியைத் தொடர்ந்து, கல்பாவில் முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார்.[6]

கௌரவங்கள்

தொகு

2010 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நேகியை கௌரவிப்பதற்காக இவரது கிராமத்திற்குச் சென்றார்.[7]

2014 ஆம் ஆண்டில், கூகுள் இந்தியா ஒரு பொது சேவை அறிவிப்பை வெளியிட்டது. அதில் நேகி சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் பங்கேற்றது பற்றி கூறினார். மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "'Like a Ph.D': How Election Commission tracked India's first voter Shyam Saran Negi after 45 years". Hindustan Times (in ஆங்கிலம்). 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
  2. "Independent India's first voter: 100 and ailing, keen to vote in 2019".
  3. "India's first voter Shyam Saran Negi casts his vote at Kalpa".
  4. 4.0 4.1 India's first voter in Himachal Pradesh, by Gautam Dhmeer, in the டெக்கன் ஹெரால்டு; published 30 October 2012; retrieved 7 April 2014
  5. "India's first voter Shyam Saran Negi set for acting debut in Bollywood". Archived from the original on 23 June 2015.
  6. Binley, Alex (5 November 2022). "Shyam Saran Negi: Man dubbed 'India's first voter' dies aged 105". BBC News. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
  7. "Chawla meets independent India's first voter - The Hindu". The Hindu (thehindu.com). 12 June 2010. http://www.thehindu.com/news/national/chawla-meets-independent-indias-first-voter/article453897.ece. பார்த்த நாள்: 5 April 2014. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_சரண்_நேகி&oldid=4140052" இலிருந்து மீள்விக்கப்பட்டது