சியோத் குகைகள்

சியோத் குகைகள் (Siyot caves), இதனை கதேஷ்வரர் பௌத்த குகைகள் என்றும் அழைப்பர்.[1] இவைகள் ஐந்து பௌத்த குடைவரைக் குகைளின் தொகுதியாகும். இக்குகைகள் குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், லக்பத் தாலுக்காவின் சியோத் கிராமத்தில் உள்ளது.[2]

முதன்மை சியோத் குகையின் அகலப்பறப்புக் காட்சி, கட்ச் மாவட்டம், குசராத்து

இதன் முதன்மைக் குகையில் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சிவன் சன்னதி அமைந்துள்ளது.[1]

பின்னர் இக்குடைவரை குகைகளை பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். இக்குகையில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது. பிற நான்கு குகைகள் ஒற்றை அறைகளுடன் உள்ளது.

கிபி ஏழாம் நூற்றாண்டில், சிந்து ஆற்றின் கழிமுகத்தில் இருந்த எண்பது குகைகளின் ஒரு தொகுப்பாக சியோத் குகைகள் இருந்ததாக சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் கருதுகிறார்..[3][4][5][6][7][8][9][10][11]

சியோத் கிராமத்தில் 1988-1989ல் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், கௌதம புத்தர் உருவம் பொறித்த களிமண் சிலைகளும், பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் செப்பு மோதிரங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நந்தி உருவங்கள், மணிகள், சங்கிலிகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.

அகழ்வாய்வின் படி, இப்பகுதியை சைவர்களிடமிருந்து பௌத்தர்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் மீண்டும் சைவர்களால் இக்குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][12]

மிகவும் தொன்மையான படிகளுடன் கூடிய கிணறு இக்குகைகளின் அருகே உள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Susan Verma Mishra; Himanshu Prabha Ray (5 August 2016). The Archaeology of Sacred Spaces: The Temple in Western India, 2nd Century BCE–8th Century CE. Routledge. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-19374-6.
  2. Ray, Himanshu Prabha. "Maritime Landscapes and Coastal Architecture: The Long Coastline of India" (PDF). IGNCA. p. 3. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Aruna Deshpande (1 November 2013). Buddhist India Rediscovered. Jaico Publishing House. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8495-247-6.
  4. "Siyot Caves". Gujarat Tourism. Archived from the original on 16 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Siot caves, Lakhpat taluka". Megalithic Portal Gallery. 28 October 2007. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  6. "Siot caves, Lakhpat taluka". The Megalithic Portal. 28 October 2007. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  7. "On Modi website, a piece on Gujarat's Buddhist link". The Indian Express. 15 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  8. "Mausam to link 10 Gujarat sites to Indian Ocean world". The Times of India. 24 July 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  9. "Gujarat to be projected as Buddhist pilgrimage destination". The Times of India. 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  10. "India plans to preserve Buddhist caves". Buddhist Channel. 30 March 2011. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  11. "A Virtual Tour, Gujarat Govt Preserving Rich Buddhist Heritage". India Behind The Lens (News Centre) IBTL. 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  12. Joshi, M. C., தொகுப்பாசிரியர் (1993). "Excavation at Siyot, District Kutch". Indian Archaeology 1988–89: A Review (New Delhi: The Director General, Archaeological Survey of India): 10. http://www.asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201988-89%20A%20Review.pdf. பார்த்த நாள்: 2017-08-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோத்_குகைகள்&oldid=4059623" இலிருந்து மீள்விக்கப்பட்டது