சிராயு அமின்

சிராயு அமீன் (Chirayu Amin) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவரான இவர், இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள வடோதராவைத் தலைமையிடமாகக் கொண்ட அலெம்பிக் மருந்துகள் நிறுவனம் மற்றும் அலெம்பிக் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்படுகிறார்.[1][2][3] இந்தியன் பிரீமியர் லீக்கின் தலைவராகவும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். சில காலம் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். பரோடா துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். மே 2021 நிலவரப்படி, போர்ப்சு அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி அமீனின் நிகர சொத்து மதிப்பு 1.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.. [1]

சிராயு அமின்
Chirayu Amin
தேசியம்இந்தியாn
கல்விமகாராசா சாயாச்சிராவ் பல்கலைக்கழகம் (பி.ஏ.)
செட்டான் ஆல் பல்கலைக்கழகம், அமெரிக்கா (எம்.பி.ஏ)
பணிChairman & முதன்மை செயல் அலுவலர் of Alembic Pharmaceuticals Ltd and President of the Baroda Cricket Association.
சொத்து மதிப்புவார்ப்புரு:வளர்முகம் ஐஅ$1.8 பில்லியன் (மே 2021)[1]
வாழ்க்கைத்
துணை
மாலிகா அமின்
பிள்ளைகள்3

சனவரி 2021 இல், குசராத்து தொழில்துறை கூட்டமைப்பு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. [4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சிராயு அமினின் மனைவி மலிகா சிராயு அமீன், கோடக் வெல்த் ஊருன் நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Chirayu Amin" (in en). Forbes.com. March 6, 2018. https://www.forbes.com/profile/chirayu-amin. 
  2. "How The Amin Family Scions Changed Alembic's Fortunes". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  3. "How The Amin Family Scions Changed Alembic's Fortunes". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  4. "Chirayu Amin given FGI lifetime achievement award | Vadodara News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/vadodara/chirayu-amin-given-fgi-lifetime-achievement-award/articleshow/80391773.cms. 
  5. "HCL Tech's Roshni Nadar is India's richest woman in 2020, according to Kotak Wealth Hurun India list". Business Insider. https://www.businessinsider.in/thelife/personalities/news/these-are-the-top-10-richest-women-in-india-in-2020-according-to-kotak-hurun-wealthy-women-list-2020/slidelist/79548786.cms. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராயு_அமின்&oldid=3432413" இலிருந்து மீள்விக்கப்பட்டது