சிரின் தர்சா
சிரின் பிராமுரோசு (Shirin Framroze Darasha 27 டிசம்பர் 1938 - 2 மே 2012) [1] 1973 - 2007 முதல் [1] மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பள்ளி முதல்வராக ஜேபி பெட்டிட் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை தாங்கினார் [2] பரவலாகப் புகழ்பெற்ற இந்தியக் கல்வியாளர், நாடக ஆசிரியர் மற்றும் பெண்ணியவாதியான, இவர் இந்திய சமூகத்தில் பல பழமைவாத மற்றும் மரபுகளுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார். குழந்தை பருவத்தில் "மகிழ்ச்சியின்" முக்கியத்துவம் குறித்து இவளுக்கு தெளிவான பார்வை இருந்தன. இந்திய கல்வித் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் வீட்டுப்பாடம் ஆகியவற்றை இவர் ஆதரிக்கவில்லை.[3][4] பெண்கள் கணிதம் மற்றும் அறிவியலில் பாதகமான நிலையில் உள்ளனர் என்ற பரவலான பார்வையை இவர் ஆதரித்தார்.[5] நாடக ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என - கல்வியில் நாடகத்தை இவர் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினார். பல ஆண்டுகளாக, தர்சா இந்தியாவில் பெண் கல்வித் துறையில் ஒரு தனித்துவமான மற்றும் உணர்ச்சிமிக்க நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[6][7]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுசிரின் தர்சா ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார் மற்றும் இந்தியாவின் மும்பையில் வளர்ந்தார்.[3]
மும்பையில் உள்ள குயின் மேரி பள்ளியில் பட்டம் (மெட்ரிகுலேஷன்) முடித்ததும், மும்பையில் செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார், உளவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு தர்சாவிற்கு ஃபுல்பிரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஹவாயின் கிழக்கு-மேற்கு மையத்தில் கல்வியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
நாடக ஆசிரியராக தொழில் வாழ்க்கை
தொகுதர்சா ஒரு திறமையான நாடக ஆசிரியர், இவர் இருபதாம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றோடு தொடர்புடைய கருப்பொருள்கள் மற்றும் ஆளுமைகளில் கவனம் செலுத்தினார். இவரது பிரபலமான நாடகம் " பிகாஜி காமா " முதன்முதலில் 1988 இல் அரங்கேற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், ஐந்தாவது உலக பார்சி சமய காங்கிரசின் போது, இந்த நாடகத்தின் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகம் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்பட்டது. இவரது நாடகங்களில், தர்சா பழமைவாத முற்போக்கு எண்ணங்கொண்ட கருத்துக்களை எதிர்க்கும் வகையில் கருத்துக்களை அமையச் செய்தார், இதன் மூலம் பெண்கள் மாறாநிலையில் செய்ல்படுவதனை எதிர்த்து தனது கருத்துக்களைப் பரப்பினார். மும்பையில் பல்வேறு மேடை தயாரிப்புகளில் முத்து பதம்சியுடன் தர்சா பங்களித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார் இவரது பன்களிப்பிற்காகப் பரவலான பாராட்டினையும் பெற்றார்.[8][9]
முதல்வராக
தொகுஇந்தி வித்யா பவன் மற்றும் தி பாம்பே சரவதேச பள்ளியில் பணிபுரிந்த பிறகு, தாராஷா 1972 இல் ஜேபி பெட்டிட் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டார். அங்கு பணி செய்த காலத்தில் "தயவு செய்து தொந்தரவு செய்யுங்கள்" எனும் முறையினை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதன்மூலம் மாணவர்கள் தங்களது எண்ணங்களை தயங்காது வெளிக்கொணர வகை செய்தார்.[10] இவர் தனது கற்பித்தலில் நடிப்புக் கலைகளிலிருந்து கற்றுக்கொண்டதை இணைத்து, தனது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நாடகங்கள் மூலமாக தனது கருத்துகளைப் பயன்படுத்தினார்.[3]
இறப்பு
தொகு73 வயதில், சிரின் தர்சா நுரையீரல் இழைமப் பெருக்க நோயினால் இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் பல தசாப்தங்களாக இவரால் கற்பிக்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட மற்றும் ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Ex-principal of J B Petit passes away". The India Times. 3 May 2012. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ "Testimonials". jbpetithighschool.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
- ↑ 3.0 3.1 3.2 "Educator par excellence - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ "Shirin Darasha retires | Events & Personalities". www.parsiana.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ https://plus.google.com/107324234873078450867 (2006-05-27). "Hungama TV COO Zarina Mehta". Indian Television Dot Com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
{{cite web}}
:|last=
has generic name (help); External link in
(help)CS1 maint: numeric names: authors list (link)|last=
- ↑ Das, Soma (28 September 2012). "One Revolutionary Salutes Another". MidDay. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ "Teachers we love". mid-day (in ஆங்கிலம்). 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ Dharker, Anil. "Remembering Pearl Padamsee". The Times Group. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "Humour in disguise". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
- ↑ "Romancing the stones". mid-day (in ஆங்கிலம்). 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.