சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு

(சிர்கோனியம்(IV) சல்பேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிர்கோனியம்(IV) சல்பேட்டு (Zirconium(IV) sulfate) என்பது Zr(SO4)2(H2O)n என்ற பொதுவாய்ப்பாடுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இங்கு n = 0, 4, 5, 7. என்று வேறுபடும். இவ்வகைச் சேர்மங்களின் இனங்கள் நீரேற்ற அளவின் அடிப்படையில் தொடர்பு கொண்டுள்ளன. நீரில் கரையும் இயல்புடைய சிர்கோனியம்(IV) சல்பேட்டு நிறமற்று அல்லது வெண்மையாகக் காணப்படுகிறது.

சிர்க்கோனியம் இருசல்பேட்டு
Zirconium(IV) sulfate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் இருசல்பேட்டு
இனங்காட்டிகள்
14644-61-2 Y
111378-69-9 N
7446-31-3 (tetrahydrate) N
பப்கெம் 16213785
வே.ந.வி.ப எண் ZH9100000
பண்புகள்
Zr(SO4)2(H2O)x ( x = 0, 4, 5, 7)
வாய்ப்பாட்டு எடை 285.35 கி/மோல் (நீரிலி)
355.41 கி/மோல் (நான்குநீரேற்று)
தோற்றம் வெண்மை நிறப் படிகங்கள்
அடர்த்தி 3.22 g/cm3 (நீரிலி)
52.5 கி/100 மி.லி (நான்குநீரேற்று)
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3500 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் அமைப்பு

தொகு

சிர்க்கோனியம் ஆக்சைடின் மீது கந்தக அமிலம் வினைபுரிந்து சிர்கோனியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.

ZrO2 + 2 H2SO4 + H2O → Zr(SO4)2(H2O)x

நீரிலி வகை சிர்கோனியம்(IV) சல்பேட்டும் அறியப்படுகிறது.

7 மற்றும் 8 ஒருங்கிணைவு சிர்க்கோனியம் மையங்கள் கொண்டுள்ள அணைவு வடிவமைப்பை இச்சல்பேட்டுகள் ஏற்றுள்ளன. சல்பேட்டு மற்றும் தண்ணீர் இரண்டும் ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன[2][3].

பயன்கள்

தொகு

வெள்ளைத் தோல் பதனிடுதலில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை வீழ்படிவாக்குதலுக்கு சிர்க்கோனியம் சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு நிறமி நிலைப்படுத்தியாகவும் இது பயன்படுகிறது..

மேற்கோள்கள்

தொகு
  1. IDLH|7440677|Zirconium compounds (as Zr)
  2. Bear, Isabel J.; Mumme, W. G. "Crystal chemistry of zirconium sulfate. III. Structure of the β-pentahydrate, Zr2(SO4)4(H2O)8.2H2O, and the interrelationship of the four higher hydrates" Acta Cryst. 1969. B25, 1572-1581. எஆசு:10.1107/S0567740869004341
  3. Squattrito, Philip J.; Rudolf, Philip R.; Clearfield, Abraham "Crystal structure of a complex basic zirconium sulfate" Inorganic Chemistry 1987, vol. 26, 4240-4.எஆசு:10.1021/ic00272a020