சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு
சிர்கோனியம்(IV) சல்பேட்டு (Zirconium(IV) sulfate) என்பது Zr(SO4)2(H2O)n என்ற பொதுவாய்ப்பாடுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இங்கு n = 0, 4, 5, 7. என்று வேறுபடும். இவ்வகைச் சேர்மங்களின் இனங்கள் நீரேற்ற அளவின் அடிப்படையில் தொடர்பு கொண்டுள்ளன. நீரில் கரையும் இயல்புடைய சிர்கோனியம்(IV) சல்பேட்டு நிறமற்று அல்லது வெண்மையாகக் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் இருசல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14644-61-2 111378-69-9 7446-31-3 (tetrahydrate) | |
பப்கெம் | 16213785 |
வே.ந.வி.ப எண் | ZH9100000 |
பண்புகள் | |
Zr(SO4)2(H2O)x ( x = 0, 4, 5, 7) | |
வாய்ப்பாட்டு எடை | 285.35 கி/மோல் (நீரிலி) 355.41 கி/மோல் (நான்குநீரேற்று) |
தோற்றம் | வெண்மை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 3.22 g/cm3 (நீரிலி) |
52.5 கி/100 மி.லி (நான்குநீரேற்று) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3500 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் அமைப்பு
தொகுசிர்க்கோனியம் ஆக்சைடின் மீது கந்தக அமிலம் வினைபுரிந்து சிர்கோனியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.
- ZrO2 + 2 H2SO4 + H2O → Zr(SO4)2(H2O)x
நீரிலி வகை சிர்கோனியம்(IV) சல்பேட்டும் அறியப்படுகிறது.
7 மற்றும் 8 ஒருங்கிணைவு சிர்க்கோனியம் மையங்கள் கொண்டுள்ள அணைவு வடிவமைப்பை இச்சல்பேட்டுகள் ஏற்றுள்ளன. சல்பேட்டு மற்றும் தண்ணீர் இரண்டும் ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன[2][3].
பயன்கள்
தொகுவெள்ளைத் தோல் பதனிடுதலில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை வீழ்படிவாக்குதலுக்கு சிர்க்கோனியம் சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு நிறமி நிலைப்படுத்தியாகவும் இது பயன்படுகிறது..
மேற்கோள்கள்
தொகு- ↑ IDLH|7440677|Zirconium compounds (as Zr)
- ↑ Bear, Isabel J.; Mumme, W. G. "Crystal chemistry of zirconium sulfate. III. Structure of the β-pentahydrate, Zr2(SO4)4(H2O)8.2H2O, and the interrelationship of the four higher hydrates" Acta Cryst. 1969. B25, 1572-1581. எஆசு:10.1107/S0567740869004341
- ↑ Squattrito, Philip J.; Rudolf, Philip R.; Clearfield, Abraham "Crystal structure of a complex basic zirconium sulfate" Inorganic Chemistry 1987, vol. 26, 4240-4.எஆசு:10.1021/ic00272a020