நடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 6:
 
==தமிழ்நாட்டில் நடுகற்கள்==
தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. [[செங்கம்]], [[தருமபுரி]] ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான்கள் போன்ற சிற்றரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகிறது. தமிழ் நாட்டில் [[பல்லவர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] காலத்திலும், [[கங்கர்]], [[பாணர்]], [[இராட்டிரகூடர்]] போன்ற அரச மரபினர் காலத்திலும், பிற்காலத்தில் [[ஒய்சாளர்|ஒய்சாள]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]], [[நாயக்கர்|நாயக்க]] மரபினர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
===சங்ககாலத்தில் நடுகல்===
வரிசை 12:
மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டுவருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.
 
நம் பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே "<ref> [[மாங்குடி மருதனார்]] [[புறநானூறு]].</ref>என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்
 
==வழிபடும் முறை==
வரிசை 22:
::மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்’<ref> [[புறநானூறு]] பா.306</ref>
 
இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர் . நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. ‘நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது.
 
‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று [[அதியமான் நெடுமானஞ்சி]]யின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து [[அவ்வையார்]] கூறுகிறார். ஆநிரைகளையுடைய கோவலர் உயர்ந்த [[வேங்கை]] மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமாலை சூட்டி நடுகல்லை வணங்கினர் என்று [[புறநானூறு]] கூறுகிறது.
வரிசை 51:
 
==நடுகல் வழிபட ஆற்றுப்படுத்துதல்==
பாணர்களும் கூட, வீரர்களின் நடுகற்களைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு ஆற்றுப்படுத்திய நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.
 
::பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
வரிசை 61:
::கொல்புனற் சிறையின் விலங்கியோன்கல்லே"<ref> புறநானூறு பா. 263</ref>
 
பெரிய யானையின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினையுடைய பெரிய பறையினையுடைய இரவலனே, நீ போகின்றாயாயின் பகைவரது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புகள் மிகுதியாகத் தைக்கவும் எதிர்நின்று விலக்கியவனது கல்லைத் தொழாமல் போவதைத் தவிர்ப்பாயாக என்று, பாணர்கள் நடுகல்லை வணங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டதைப் புறநானூற்றின் வாயிலாக அறியலாம்.
 
வழிச் செல்லும் பாணர்கள் வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து செல்லுமாறு வழிப்ப்படுத்தப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/நடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது