குருதி ஊட்டக்குறை இதய நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 13:
| MeshID = D017202
}}
'''குருதியூட்டக்குறை இதய நோய்''' (Ischaemic heart disease) என்பது இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் ஏற்படும் நோய்களின் தொகுப்பாகும். வழமையாக முடியுருநாடி நோயால் ([[தமனிக்கூழ்மைத் தடிப்பு|முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு]]) இது ஏற்படுகின்றது, எனினும் வேறு காரணங்களும் உண்டு. இந்நோய் வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் பெருகுகின்றது; இது பெண்களை விட ஆண்களிலேயே பொதுவாகக் காணப்படுகின்றது, இந்நோய் மரபணு வழியாகவும் கடத்தப்படலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படும் தீவிளைவு உண்டு.
 
குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. குருதியூட்டக்குறையால் [[மார்பு நெருக்கு]] போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெருக்கு மற்றும் நிலையில்லா மார்பு நெருக்கு என்று மார்பு நெருக்கு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/குருதி_ஊட்டக்குறை_இதய_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது