பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 1:
'[[Imageபடிமம்:Ferdinand von Richthofen.jpg|thumb|200px|'''பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்''' ([[1833]]-[[1905]]).]]
'''பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென்''' (1833-1905), ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு [[புவியியலாளர்|புவியியலாளரும்]], பயணியும், [[அறிவியலாளர்|அறிவியலாளரும்]] ஆவார். இவர் [[ஜெர்மனி]]யில் கார்ல்ரூஹே (Karlsruhe) என்னுமிடத்தில் பிறந்தார். [[பெர்லின்]] நகரில் கல்வி கற்றார். 1860 ஆம் ஆண்டில், இயூலென்பர்க் பயணம் (Eulenburg Expedition) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும் இடையில், [[இலங்கை]], [[ஜப்பான்]], [[தாய்வான்]], செலெபெஸ், [[ஜாவா]], [[பிலிப்பைன்ஸ்]], [[சீயாம்]], [[பர்மா]] ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும் இடையில், ஐக்கிய அமெரிக்காவில், [[கலிபோர்னியா]]வில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் [[நிலவியலாளர்|நிலவியலாளராகப்]] பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை சீனா, ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
 
இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
 
இவர், 1875 இல் பொன் பல்கலைக் கழகத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1883 இலும், 1886 இலும் முறையே லீப்சிக் பல்கலைக் கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
 
 
[[பகுப்பு:புவியியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_வொன்_ரிச்தோஃபென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது