பன்னாட்டு அணுசக்தி முகமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 17:
'''பன்னாட்டு அணுசக்தி முகமையகம்''' ('''International Atomic Energy Agency''') என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் [[ஐசனோவர்]] அவர்கள் [[ஐக்கிய நாடுகள் பொதுமன்றம்|ஐக்கிய நாடுகள் பொதுமன்றத்தில்]] 1953-ஆம் ஆண்டு ஆற்றிய ''அமைதிக்கான அணுக்கள்'' எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார். 2005-ஆம் ஆண்டின் [[அமைதிக்கான நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் [[மொகம்மது எல்பரதேய்]] என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
== உள்ளமைப்பு ==
பன்நாட்டு அணு ஆற்றல் முகைமை (International atomic energy agency-IAEA ) ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1957 சூலை மாதம் 29 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட அழிவினைக் கண்ட மக்கள் அணு ஆற்றலைப் பற்றி பெரிதும் அச்சம் கொண்டனர். இந்நிலையில் தான் ஆக்கத்திற்கே அணு (ATOM FOR PEACE ) எனும் கோட்பாட்டுடன் IAEA தொடங்கப் பெற்றது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அணு ஆற்றறலை அமைதி, மருத்துவம், வளமை முதலியவைகளை உலகம் முழுவதும் பரவலாக்கவும் அதனை விரைவுபடுத்தவும் விரிவு படுத்துவதுமாகும். இவ்வமைபின் உறுப்பு நாடுகள் அணு ஆற்றலை இராணுவத்திற்காக பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதுமாகும்.
 
UNO, WHO போன்று இது ஒரு பன்நாட்டு நிறுவனம்.தன்னாடச்சிப் பெற்ற அமைப்பாக இருந்தாலும் இது தனது வருட வரவு செரவு மற்றும் நடவடிக்கைப் பற்றி UNO விற்கும் பொதுசபைக்கும் அனுப்புகிறது. 35 நாடுகள் கொண்ட குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குனர்,அனைத்து உறுப்பு நாடுகளின் பொதுசபையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.செலவுகளை உறுப்பு நாடுகள் ஏற்கின்றன.
 
== உள்ளமைப்பு ==
பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது [[ஆஸ்திரியா]] நாட்டின் [[வியன்னா]] நகரில் உள்ள ''வியன்னா பன்னாட்டு மையத்தில்'' தலைமை கொண்டுள்ளது. இத்துடன் [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் [[ஜெனெவா]], அமெரிக்க ஒன்றியத்தின் [[நியு யார்க்]], [[கனடா]] நாட்டின் [[டொரொன்டோ]] மற்றும் [[ஜப்பான்]] நாட்டின் [[டோக்கியோ]] ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் [[மொனாகோ]] அரசகத்திலும், [[ஆஸ்திரியா]] நாட்டின் [[வியன்னா]] மற்றும் [[சைபெர்ஸ்டோர்ஃப்]] நகரங்களிலும், [[இத்தாலி]] நாட்டின் [[திரெஸ்தே]] நகரிலும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அணுசக்தி_முகமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது