கதைக்குள் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
 
வரிசை 1:
'''கதைக்குள் கதை''' என்பது [[கதை]] ஒன்றின் போக்கின் போது இன்னொரு கதையைப் புகுத்தும் ஒரு முறையாகும். [[புதினம்|புதினங்கள்]], [[சிறுகதை]]கள், [[நாடகம்|நாடகங்கள்]], [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகள், [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[கவிதை]]கள் போன்றவற்றில் இந்த உத்தி பயன்படுகின்றது.
 
==நோக்கம்==
துணைக் கதைகள், வெறுமனே களிப்பூட்டுவதற்காகவோ அல்லது கதையின் நிகழ்வுகளுக்குத் தேவையான [[எடுத்துக்காட்டு]]களைத் தருவதற்காகவோ பயன்படுகின்றன. மேற்கூறிய இரண்டு வழிகளிலும், துணைக்கதைகள், முதன்மைக் கதையில் வருகின்ற [[கதைமாந்தர்]]களைப் பொறுத்தவரை [[குறியீட்டியல்|குறியீட்டு]], [[உளவியல்]] முக்கியத்துவம் கொண்டவயாக அமைகின்றன. பெரும்பாலும் இரண்டு கதைகளுக்கும் இடையே ஒரு இணையான போக்குக் காணப்படும். துணைக் கதையில் வெளிப்படும் பொருள், முதன்மைக் கதையில் மறைபொருளாக உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.
 
==பழைய இலக்கியங்களில்==
பழங்கால இந்தியாவின் இதிகாசங்களிலும், வேறுபல இலக்கிய வடிவங்களிலும் கதைக்குள் கதை சொல்லும் உத்தி தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] ஆகிய இதிகாசங்களையும், [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரத்தையும்]] இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆயிரத்தொரு இரவுகள் என்னும் நூலிலும் இந்த உத்தி கையாளப்பட்டு உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கதைக்குள்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது