விலங்குக் காட்சிச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் இல்லை...
No edit summary
வரிசை 1:
{{Unreferenced}}
[[File:San Diego Zoo entrance elephant.jpg|thumb|right|280px|சன்டிடிகா விலங்குக் காட்சிச்சாலை, கலிபோர்னியா, மே 2007.]]
விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே '''விலங்குக் காட்சிச்சாலை''' ஆகும். விலங்குகளை அவற்றின் [[இயற்கை]] வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை, உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை அனைவரும் காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரும் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன.
== வரலாறு ==
 
விலங்கு காட்சியகத்தின் வரலாறு என்பது நீண்ட வரலாறைக் கொண்டது. உலகின் மிகப் பழமையான உயிரியல் சேகரிப்பு தோராயமாக, கி.மு 3500 காலகட்டத்தில் எகிப்தில் இருந்ததாக 2009 ஆண்டு ஹிராகோன்போலிஸ் என்ற பகுதியில் நடந்த அகழாய்வின் மூலமாக தெரியவந்தது. இங்கு கவனத்தைக் கவரும் விலங்குகளான நீர்யானைகள், ஹர்டிபீட்ஸ் மான்கள், யானைகள், பபூன் குரங்குகள், காட்டுப் பூனைகள் போன்றவை சேகரிப்பில் இருந்துள்ளன.<ref>World's First Zoo - Hierakonpolis, Egypt, ''Archaeology Magazine'', http://www.archaeology.org/1001/topten/egypt.html</ref> கி.மு. 11 நூற்றாண்டில் மத்திய அசீரிய பேரரசின் மன்னராக அசூர் பெல் கலா என்பவர் இருந்தபோது விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின், சீன பேரரசியான டான்கி என்பவர் மான் இல்லத்தை கட்டிவைத்திருந்தார். மேலும் சீன அரசர் வென் ஆப் ஜூ என்பவர் லிங்க்-யூ என்னும் விலங்கு காட்சியகத்தை வைத்திருந்தார் இது 1,500 ஏக்கர் (6.1 ச.கி.மீ) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்து நன்கு அறியப்பட்ட விலங்கு சேகரிப்பு மையம் என்பது [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரேல் நாட்டின்]] அரசியான செமிராமிஸ் மற்றும் [[அசிரியா]] மன்னர் அசூர்பானிபால், பாபிலோனியா மன்னரான நேபுகாத்நேச்சார் போன்றோர் ஆகியோர் அமைத்திருந்தது ஆகும். <ref name=EBZoo>"Zoo," ''Encyclopædia Britannica'', 2008.</ref> கி.மு நான்காம் நூற்றாண்டில் உயிரியல் பூங்காகள் பல கிரேக்க நகர நாடுகளில் இருந்தன ; [[பேரரசர் அலெக்சாந்தர்]] அவர் போரில் வென்ற நாடுகளில் இருந்து விலங்குகளை கிரேக்கத்திற்கு அனுப்பி வைத்ததாக அறியப்படுகிறது. ரோமப் பேரரசர்கள், ஆய்வுக்கும், அரங்கில் பயன்படுத்தவும் விலங்குகளை தனியார் சேகரித்து வைத்திருந்தனர் <ref name=EBZoo/>
== வெளி இணைப்புகள் ==
{{Reflist}}
{{commons|Category:Zoos}}
== மேற்கோள்கள்
 
[[பகுப்பு:சுற்றுலா]]
[[பகுப்பு:விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விலங்குக்_காட்சிச்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது