திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
திரைப்பட வரலாறும் திரைப்படக் கருவிகளும்
வரிசை 9:
 
==வரலாறு==
 
ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு,எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார்.அதன்பின்,ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க,அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார்.இதுவே,புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது.பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது.மேலும்,இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன.இவற்றை மக்களிடையே காட்டிக் கட்டணம் பெறப்பட்டது.
 
இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், [[இசை]] ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் [[மைஸ் அன் சீன்]] (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை.
 
ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில்,திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள்.இவறின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும்.
 
===திரைப்படக் கருவிகள்:படச்சுருள்===
 
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது.படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும்.தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.
 
===படம்பிடிக்கும் கருவி===
 
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர்.இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.
 
===ஒலிப்பதிவு===
 
திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும்.இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன.இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.
 
===நவீன சினிமா===
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது