இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 11:
 
தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழை]] வளக்க [[தமிழ்நாடு]] அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.
 
===வரலாறு===
 
முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல்வாயிலாக அறியமுடிகிறது.
 
"காமநூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்"
 
அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம்பாடலான பேரகத்தியத் திரட்டு,மேற்.1 இல்,
 
"இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்இன்று ஆகில் எண்ணெயும் இன்றே
எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல்
இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்."என்பதில் தான் இலக்கியம் எனும் சொல்லாட்சி எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் ஆகிய பொருளில் குறிப்பிடப் பெறாமல்,கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு எனச் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பாடல் யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.<ref name="இலக்கியக்கலை">{{cite book | title=இலக்கியக்கலை | publisher=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | location=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-600018 | pages=3}}</ref>
 
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது