பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1862 இறப்புகள்
சிNo edit summary
வரிசை 23:
}}
 
'''அபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் சா''', '''இரண்டாம் பகதூர் சா''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான '''பகதூர் சா சஃபார்''' (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரும்]], [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தின்]] கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் [[இரண்டாம் அக்பர் சா|இரண்டாம் அக்பர் சா சானி]] என்பவருக்கு, அவரது இந்து [[ராசபுத்திரர்ராஜ்புத்|ராசபுத்திர]] மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.

இரண்டாம் அக்பர் சா 1838 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் சா சஃபார் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் சா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
 
இரண்டாம் அக்பர் சா சானி, அவரது வாரிசாக பகதூர் சா சஃபாரரைத் தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா செகாங்கீர்|மிர்சா செகாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் சா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா செகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
வரி 36 ⟶ 38:
[[படிமம்:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டெம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சா சஃபாரும், மகன்களும் உமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[படிமம்:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
1857[[சிப்பாய்க் ஆம்கிளர்ச்சி, ஆண்டின் இந்தியக் கிளர்ச்சி1857]] விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.

இந்துக்கள், முசுலிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> சஃபார் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
 
இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[உமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஒட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச் சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன், சஃபாரின் ஆண்மக்களான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது