யெரெவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,838 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஆர்மீனியா)
சிNo edit summary
 
[[யுனெஸ்கோ]]வினால், 2012 ஆம் ஆண்டின் [[உலகப் புத்தகத் தலைநகரம்|உலகப் புத்தகத் தலைநகரமாக]] யெரெவான் அறிவிக்கப்பட்டது<ref name="UN News Centre">{{cite web|url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=35242&Cr=UNESCO&Cr1= UN News Cnetre|title=Yerevan named World Book Capital 2012 by UN cultural agency}}</ref>.
 
==வரலாறு==
யெரெவான் நகரம் கிமு 800 முதல் உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆர்மீனியாவின் 13வது தலைநகராக 1918 முதல் யெரெவான் உள்ளது. யெரெவான் அருகே வரலாற்றுப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது. யெரெவான் நகரத்தின் அருகே உள்ள மலை மீது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ததேவ் கிறிஸ்த மடாலயம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
யெரெவான் நகரம் துவக்கத்தில் ரோமானியர்கள், [[பாரத்தியப் பேரரசு]] கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது.
 
1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது. யெரெவான் ''பிங்க் நகரம்'' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. யெரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் யெரெவானில்தான் வசிக்கிறார்கள். பண்டைய காலத்தில் ''எரெபுனி'' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நகரம், பிறகு ''எரிவான்'' என்றும் தற்போது யெரெவான் என்றும் அழைக்கப்படுகிறது.
 
கிமு. 782ல் எழுப்பப்பட்ட ஒரு பெரும் கோட்டை, இந்த நகரின் அடையாளமாகவும் சரித்திரச் சின்னமாகவும் விளங்குகிறது. 1915-ல் முதலாம் உலகப் போரின் போது, [[உதுமானியப் பேரரசு| ஒட்டாமன் பேரரசு]], அர்மீனியர்களை இனப்படுகொலை செய்தது. இனப் படுகொலையின்போது தப்பிய ஆயிரக்கணக்கான அர்மீனியர்கள் யெரெவான் நகரத்தில் குடியேறினார்கள். கோட்டையும் அவர்கள் பாதுகாப்புக்கு உறுதியளித்தது. யெரெவான் அர்மீனியாவின் தலைநகராக மாறியதற்கு இதுவும் முக்கியக் காரணம்.
 
பின்னர் யெரெவான் நகரம் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்கியது. சோவியத் யூனியன் கலைந்தபோது தனி நாடானது. அர்மீனியாவின் நிர்வாகம், கலாச்சார மையமாக எரெவான் விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/world/article24361984.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read பழமையிலும் பழமையான ‘எரெவான்’]</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:யெரெவான்| ]]
[[பகுப்பு:ஆர்மீனியா]]
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2550658" இருந்து மீள்விக்கப்பட்டது