உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 29:
பெரும்பாலும் உப்பு என்று சொல்லப்படுவது சோடியம் குளோரைடு என்ற வேதிச்சேர்மத்தையே ஆகும். இந்த அயனிச் சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NaCl. [[சோடியம்|சோடியமும்]] [[குளோரின்|குளோரினும்]] சம அளவில் கலந்து சோடியம் குளோரைடு உருவாகியிருப்பதை இச்சமன்பாடு காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கடல் உப்புகளிலும், புதியதாக உருவாக்கப்படும் உப்புகளிலும் அரிய தனிமங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. இத்தகைய உப்புகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கின்றன. தோண்டியெடுக்கப்படும் உப்பு மேசை உப்பு தயாரிப்பதற்காக சுத்திகரிக்கப்படுகிறது. தண்ணீரில் கரைக்கப்படும் இவ்வுப்பு கரைசலாக்கப்பட்டு இதிலிருந்து பிற கனிமங்கள் வடிகட்டல் முறையில் நீக்கப்படுகின்றன. பின்னர் மீள ஆவியாக்கப்படுகின்றன. இச்செயல்முறையின் போது உப்புடன் அயோடினேற்றம் செய்யப்படுகிறது. உப்புப் படிகங்கள் ஒளி ஊடுறுவும் தன்மையும் கனசதுர வடிவம் கொண்டும் காணப்படுகின்றன, தூய்மையான உப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் மாசுக்கள் சேர்ந்தால் இவ்வுப்பு நீலம் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.
 
உப்பின் மோலார் நிறை 58.443 கி/மோல், உருகுநிலை 801 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் கொதிநிலை 1,465 °செல்சியசு வெப்பநிலை ஆகும். (2,669 °F). உப்பின் அடர்த்தி கனசென்டிமீட்டருக்கு 2.17 கிராம்கள் ஆகும். இது நீரில் நன்றாகக் கரைகிறது. அவ்வாறு கரையும் போது Na+ மற்றும் Cl− அயனிகளாக உப்பு பிரிகிறது. மேலும் உப்பின் கரைதிறன் லிட்டருக்கு 359 கிராம்கள் என அளவிடப்பட்டுள்ளது. குளிர் கரைசல்களில் உப்பு இருநீரேற்றாக (NaCl•2H2O.)படிகமாகிறது<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/519712/salt-NaCl |title=Salt (NaCl) |last1=Wood |first1=Frank Osborne |last2=Ralston |first2=Robert H. |work=Encyclopædia Britannica |accessdate=16 October 2013}}</ref>. சோடியம் குளோரைடின் கரைசல்கள் தூய்மையான நீரிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 23.31 எடை சதவீத உப்பின் உறைநிலை −21.12 °செல்சியசு, வெப்பநிலை என்றும் நிறைவுற்ற உப்பு கரைசலின் கொதிநிலை சுமாராக 108.7° செல்சியசு வெப்பநிலையாகவும் உள்ளது<ref name=u1>Elvers, B. ''et al.'' (ed.) (1991) Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 5th ed. Vol. A24, Wiley, p. 319, {{ISBN |978-3-527-20124-2}}.</ref>.
 
== உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது