பிரேட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 16:
[[Image:rector univ.jpg|150px|thumb|முழுக் கல்விசார்ந்த உடையில் இருக்கும் எசுப்பானியக் கல்லூரித் தலைவர். எசுப்பானியப் பல்கலைக் கழகங்களில் அணியப்படும் கல்விசார் தலையணியான பிரேட்டாவை அணிந்துள்ளார்.]]
 
ஐரோப்பாவில் மத்தியகாலப் பல்கலைக் கழகங்களில் புதிய மாணவர்களுக்கு முதுநிலை, முனைவர் பட்டங்களை வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக ''பிரெட்டேசியோ'' எனப்படும் பிரேட்டா அணிவிப்பதும் இடம்பெறும். இது பட்டம் பெறுபவரின் தகைமைக்குச் சான்றாக அடையாளப் புத்தகம் வழங்குவதுடன் இடம்பெறும்.<ref>Olmert, Michael (1996). ''Milton's Teeth and Ovid's Umbrella: Curiouser & Curiouser Adventures in History'', p.178. Simon & Schuster, New York. {{ISBN |0684801647}}.</ref> இதற்குப் பயன்பட்ட நான்கு மூலைகள் கொண்ட பிரேட்டா சமயத் தேவைகளுக்கு ஆனவையல்ல.<ref>Ephemerdies Liturgicae, 1901, vol. XIV, 214: "Biretum doctorale quatuor apicibus constans, iam diximus, confundendum non est cum clericali, ac proinde nullimode in choro adibendum.</ref> கல்விசார்ந்த பிரேட்டாக்கள், ஐரோப்பாவிலும், பிரித்தானியத் தீவுகளிலும் பல்வேறு பாணிகளைச் சேர்ந்த கல்விசார் பிரேட்டாக்களாக வளர்ச்சியடைந்தன. இன்று சில மதஞ்சாராத பல்கலைக்கழகங்களில் கல்விசார் தலையணிகள் உண்மையான பிரேட்டாக்களாக இல்லாவிட்டாலும் கூட அவற்றையும் பிரேட்டாக்கள் எனவே அழைக்கின்றனர்.
 
கிறித்தவ மதத் தொடர்பான பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்தைப் பெறுபவர்களுக்கு, அத்தகுதிக்கான முக்கிய அடையாளமாக இருப்பது நான்கு உச்சிகளைக் கொண்ட பிரேட்டாவே.<ref>John Abel Nainfa, Costume of Prelates of The Catholic Church: According To Roman Etiquette, 164.</ref> தொடக்க நிகழ்வுகளிலும், பிற கல்வித் தொடர்புடைய நிகழ்வுகளிலும், கிறித்தவ சமயப் பல்கலைக் கழகங்களையும், பாடப் பிரிவுகளையும் சேர்ந்த முனைவர்கள், முனைவர் பட்டத்துக்குரிய பிரேட்டாக்களை அணியும் உரிமை கொண்டவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பிரேட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது