ஐதராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்தி, அய்தராக்சைடு பக்கத்தை ஐதராக்சைடு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: திருத்தம்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 29:
| AutoignitionPt = }}
}}
'''ஐதராக்சைடு''' ''(Hydroxide)'' என்பது OH− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் ஈரணு அயனியாகும். இந்த அயனி ஓர் எதிர் மின்சுமையைக் கொண்டுள்ளது. ஓர் ஐதரசன் அணுவும் ஓர் ஆக்சிசன் அணுவும் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு இந்த அயனி உருவாகிறது. தண்ணீரின் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக இது சிறிதளவு கலந்துள்ளது. ஒரு காரமாக, ஈனியாக, கருக்கவர்பொருளாக மற்றும் ஒரு வினைவேகமாற்றியாக ஐதராக்சைடு அயனி செயல்படுகிறது. ஐதராக்சைடு அயனி உப்புகளை உருவாக்குகிறது. இவற்றில் சில உப்புகள் நீரிய கரைசலில் பிரிகையடைந்து கரைப்பானேற்ற ஐதராக்சைடு அயனிகளை வெளிவிடுகின்றன. சோடியம் ஐதராக்சைடு ஆண்டுதோறும் பலமில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருள் என்ற வணிகத் தரத்தை எட்டியுள்ளது.
 
தொடர்புள்ள மின்வேதியியலின் படி நடுநிலையாக உள்ள •HO அயனி ஐதராக்சில் இயங்குறுப்பு எனப்படுகிறது. சகப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள –OH என்ற அயனி ஐதராக்சில் குழு எனப்படுகிறது. ஐதராக்சைடு அயனியும் ஐதராக்சில் குழுவும் மின்னணு மிகுபொருள்கள் எனப்படுகின்றன. இவை கரிம வேதியியலில் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன.
பல கனிம வேதியியல் சேர்மங்களுடன் ஐதராக்சைடு என்ற சொல் அவற்றின் பெயருடன் இணைந்திருக்கிறது. ஆனால் அவை ஐதராக்சைடு அயனியின் அயனிச் சேர்மங்கள் அல்ல. ஆனால் அவை ஐதராக்சில் குழுவைக் கொண்டுள்ள சகப்பிணைப்புச் சேர்மங்களாகும்.
 
== ஐதராக்சைடு அயனி ==
வரிசை 39:
: [[h3O+|H<sub>3</sub>O<sup>+</sup>]] + OH<sup>−</sup> {{eqm}} 2H<sub>2</sub>O
இவ்வினையின் சமநிலை மாறிலியை கீழ்கண்டவாறு வரையறுக்கலாம்.
Kw = [H+][OH−]<ref group=note>[H<sup>+</sup>] denotes the concentration of [[hydrogen cation]]s and [OH<sup>−</sup>] the concentration of hydroxide ions</ref>
 
25 ° செல்சியசு வெப்பநிலையில் இதன் மதிப்பு 10−14 என்ற அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே தூய நீரில் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி 10−7 மோல்*டெசிமீட்டர்−3 என்ற அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது. சம அளவு மின்சுமையை கட்டுப்படுத்தும் திருப்திக்காக இந்த அடத்தியைப் பெறுகிறது. ஒரு கரைசலின் pH மதிப்பானது ஐதரசன் நேர்மின் அயனியின் அடர்த்தியுடன் தொடர்பு கொண்டுள்ளது<ref group=note>Strictly speaking pH is the cologarithm of the hydrogen cation [[activity (chemistry)|activity]]</ref>. சாதாரண வெப்பநிலையில் தண்ணீரின் pH மதிப்பு 7 ஆகும். ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியும் pOH மதிப்பின் மூலம் அளவிட முடியும். இது 14-pH மதிப்பாகும்<ref group=note>pOH signifies the minus the logarithm to base 10 of {OH<sup>−</sup>}, alternatively the logarithm of {{sfrac|1|{OH<sup>−</sup>}<nowiki />}}</ref>. எனவே தூய தண்ணீரின் pOH மதிப்பும் 7 என்ற மதிப்புக்கு நெருக்கமாகவே இருக்கிறது. தண்ணீருடன் காரத்தைக் கலந்தால் ஐதரசன் நேர் மின் அயனியின் அடர்த்தி குறையும். இதனால் ஐதராக்சில் அயனியின் அடர்த்தி அதிகரிக்கும். அதாவது -pH மதிப்பு அதிகரிக்கும் pOH மதிப்பு குறையும். காரத்தில் ஐதராக்சைடு அயனி இல்லாவிட்டாலும் இந்த நிகழ்வு நடக்கும்.
உதாரணமாக அமோனியாவின் pH மதிப்பு NH3 + H+ ⇌ NH+4 என்ற வினையின் காரணமாக 7 என்ற மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக ஐதரசம் நேர்மின் அயனியின் அடர்த்தி குறைந்து ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி அதிகரிக்கிறது. பல்வேறு தாங்கல் கரைசல்களில் கிட்டத்தட்ட நிலையான pOH மதிப்பைப் பராமரிக்க முடியும்.
 
நீரிய கரைசலில் <ref>{{cite journal|last=Marx|first=D.|author2=Chandra, A |author3=Tuckerman, M.E. |year=2010|title=Aqueous Basic Solutions: Hydroxide Solvation, Structural Diffusion, and Comparison to the Hydrated Proton|journal=Chem. Rev.|volume=110|issue=4|pages=2174–2216|doi=10.1021/cr900233f|pmid=20170203}}</ref> பிரான்சுடெட்டு-லோவ்ரி அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதால் ஐதராக்சைடு அயனி பிரான்சுடெட்டு-லோவ்ரி நோக்கில் ஒரு காரமாகும். ஓரிணை எலக்ட்ரான்களை கொடையளிப்பதன் மூலம் இலூயிசு காரமாகவும் இதனால் செயல்பட முடியும். நீரிய கரைசலில் ஐதரசன் மற்றும் ஐதராக்சைடு இரண்டுமே ஆக்சிசன் மற்றும் ஐதரசன் அணுக்களுக்கு இடையில் ஐதரசன் பிணைப்பு மூலம் வலிமையாக கரைப்பானேற்றம் அடைகின்றன. உண்மையில் இங்கு திண்ம நிலையில் பை ஐதராக்சைடு அயனி H3O−2 அடையாளப்படுத்தப்படுகிறது.
வரிசை 55:
== குறிப்புகள்==
{{reflist|group=note}}
 
 
[[பகுப்பு:காரங்கள்]]
[[பகுப்பு:ஐதராக்சைடுகள்]]
[[பகுப்பு:ஆக்சோஆக்சி எதிர்மின்னயனிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐதராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது